Wednesday 31 July 2013

வள்ளுவம் கடந்துவந்த பாதை (வரலாறு)

வள்ளுவம் கடந்துவந்த பாதை (வரலாறு)
================================

கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற ஜைன நூலான சீவகசிந்தாமணி (பா. 1234) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து ஈனராய்ப் பிறந்தது.

அதாவது, எயினர் (மறவர்) போன்ற இழிந்த குலத்தில் ஒருவன் பிறப்பது அவன் முற்பிறப்பில் உயிர்களைக் கொன்ற பாவத்தினால்தான் என்பது இதன் பொருளாகும். பிற உயிர்களைக் கொண்று தின்னுதல் மிக இழிவான பழக்கமாகக் கருதப்பட்டதால் அத்தகைய கொலைத் தொழிலையே தங்கள் வாழ்வியலாகக் கொண்டிருந்த மறவர், குறவர் போன்ற இனத்தவர்கள் பெளத்த, ஜைனர்களால் இழிகுலத்தவராகக் கருதப்பட்டனர். சீவகசிந்தாமணி வேறோரிடத்தில் (பா. 2741) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

வில்லின் மாக் கொன்று வெண்ணிணத் தடி விளிம்படுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.


பரதவர் முதலிய மீனவர் சமூகத்தவரும் இழிகுலத்தவராகக் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

வைதிக இந்து சமயத்தின் மிக உயர்ந்த வர்ணத்தவராகக் கருதப்பட்ட பிராம்மணர்கள் புலால் உணவை விட்டொழித்தவர்கள் அல்லர். ஜைன, பெளத்த சமயத் தாக்கத்தினால்தான் புலால் உண்ணும் வழக்கத்தை மாற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. எனவே, உபநிடதங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வைதிக சமயம், கொலைத் தொழில், புலால் உண்ணுதல் போன்ற பழக்கங்களின் அடிப்படையில் சாதிய உயர்வு தாழ்வினைக் கற்பித்தது என்பது தர்க்கபூர்வமான ஒன்றல்ல. ஜைன, பெளத்த சமயங்களின் தாக்கத்தால் மட்டுமே வைதிக இந்து சமயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உட்புகுந்து நிலை பெற்றிருக்க வேண்டும். பெளத்த சமயம், பிராம்மண வர்ணத்தவரின் ஆதிக்கத்துக்கு எதிரானது என்ற கருத்து சரியானதே. ஆனால், க்ஷத்ரிய, பிராம்மண, வைசிய, சூத்ரர் என்ற சமூகப் படிநிலையையே பெளத்தம் முன்னிறுத்தியது என்பதையும்,

“வள்ளுவ பார்ப்பனர்" வள்ளுவர் குலத்தாரையும், 

“வேளாப் பார்ப்பனர்" எனப்பட்ட விஸ்வ பிராம்மணர் (கண்மாளர்)களையும், அருந்தவர்களையும் (தபஸ்விகள்) பிராம்மணர்களுக்கு மாற்றாக ஏற்றிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுகளில் உருவான சைவ, வைணவ பக்தி இயக்கம் சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்த முயன்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று முழங்கிய அப்பர் பெருமானும், "குலந்தாங்கு சாதிகள் நாலினும் கீழ்ப்பட்டு எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளராயினும் திருமாலுக்கு அடியாராயினால் உயர்வடைவர்" என்ற ஆழ்வார் பாடலும் பிரச்சார நோக்கத்தில் வீசப்படும் மாயத் தூண்டில்கள் என்றே கொண்டாலும்கூட தர்க்கபூர்வமான பெளத்த ஜைனர்களின் ஊழ்வினைக் கோட்பாட்டுக்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட சரணாகதியினால் உயர்வடைதல் என்ற அடையாளமே என்பது ஐயத்துக்கு இடமற்ற உண்மையாகும். இவற்றால் என்ன பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால், வைதிக இந்து சமயம்தான் சாதியமைப்பை உருவாக்கிக் கட்டிக்காத்தது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே இம்மேற்கோள்களை எடுத்துக்காட்ட நேர்ந்தது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், "ஐயா, நாங்கள் தாழ்ந்த மறக்குலத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தம்மிடம் அறிமுகம் செய்துகொண்ட பொன்னனையும், பொன்னாச்சியையும் தம் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஆதர்சமான வைணவர்களாக முன்னிறுத்திக் காட்டினார். பொன்னனுக்குப் ‘பிள்ளை உறங்காவில்லி தாசன்’ என்ற தாஸ்ய நாமம் வழங்கியதோடு, அவனது தோளில் தமது கையைப் போட்டுக்கொண்டு நடப்பது குறித்து உயர்குல அடியார்கள் கேள்வி எழுப்பியபோது "உத்தமமான அந்த வைணவனைத் தொடுவது ஒரு ஸ்பரிசவேதி (தொட்டால் தங்கமாக்கும் ரசவாதம்)" என்றும் கூறியவர் ராமானுஜர். அதுமட்டுமின்றி பிள்ளை உறங்காவில்லி தாசன், அகளங்கநாடன் எனப்பட்ட விக்கிரம சோழனின் மெய்க்காவலனாகப் பணிபுரிவதன் மூலம் கிடைத்த ஊதியத்தைக் குருதட்சிணையாகக் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்து, உயர்குடிப் பாரம்பரியப் பெருமித உணர்வுடைய அரசர்களால் ஈட்டப்பட்ட பொருள் பாப திரவியம் என்றும் குறிப்பிட்டவர் ராமானுஜர்.

இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகப் புலப்படும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அவற்றோடு சார்ந்த பொருளியல் நலன்கள் என்பவை நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஆட்சியமைப்புகளும் அதிகார வர்க்கமும் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகளின் விளைவுகளே; (வைதிக) இந்து சமயமும், ஜைன, பெளத்த சமயங்களும் அவ்விளைவுகளுக்குப் பின்னேற்பு (ratification) வழங்கிய குற்றத்தை மட்டுமே செய்தன என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பெளத்த சமயம் இன்றைய வஹாபிய இஸ்லாத்தின் ஜமாத் போல சங்கம் என்ற அமைப்பின் மூலம் ஆட்சியதிகார அரசியலை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை, அரசர்களுக்கே அது பெரும் சவாலாக இருந்ததால் கி.பி. 7-8ஆம் நூற்றாண்டளவிலேயே பெளத்தம் இந்தியாவை விட்டு விரட்டப்பட்டது.

வள்ளுவ குல வரலாற்று ஆய்வுக்கான தேடலில் கிடைத்த தகவல்கள்
உங்கள் பார்வைக்கு
வாழ்க வள்ளுவம்.

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை.

திருவள்ளுவர் வள்ளுவகுலத்தை சேர்ந்தவரா.....?

திருவள்ளுவர் வள்ளுவகுலத்தை சேர்ந்தவரா.....?


கேள்வி கேட்போருக்கு ஒரு விளக்கம் ஆதாரபூர்வமான 
விளக்கங்களை சொல்வதை விட தற்போதைய நடைமுறை விளக்கத்தை வைக்கின்றேன்...

மதிப்பிற்குறியவர்களை பெயர்சொல்லி அழைப்பது ஒரு மரியாதைகுறைவான செயல் என்பதும் முற்காலத்திலும் தற்காலத்திலும் உள்ள நம்பிக்கை

ஜி.கருப்பையா அவர்கள் தமிழக காங்கிரஸ்சின் முன்னனி தலைவர் மத்தியில் பிரதமராக யார் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும்அளவு மக்களின் செல்வாக்கைபெற்றிருந்த தலைவர் காமராசருக்கு பின் காங்கிரஸ்சின் நேர்மையான தலைவர் என்றால் அது மிகையாகாது
இத்தகு பெருமைமிகு தலைவர் அவர்கள்
ஜி.கருப்பையா அவர்கள் பலருக்கு இப்படி அவரின் பெயரை சொன்னால் புரிவதைவிட 

ஜி.கருப்பையா முப்பனார்
என்றால் உடன் நினைவிற்கு வருகிறது பலருக்கு முப்பனார் என்றால் தான் புரிகிறது முப்பனார் என்பது பெயரல்ல அவரின் குலம் மரியாதைநிமிர்த்தமாக மதிப்பிற்குறிய ஐயா முப்பனார் அவர்கள் என்றுதான் அழைக்கின்றோம் 

இப்படித்தான் அன்றும் வள்ளுவ நாயனாரை திருவள்ளுவர் என்று குலப்பெயரால் அழைக்கப்பட்டது 

ஒரு குலத்தில் பிறந்தவரை பிற குலத்தின் பெயரைவைத்து யாரும் அழைப்பதில்லை என்பது அறிவுள்ளவர்கள் அறிவார்கள் 
திருக்குறள் மட்டுமே உலகப்பொதுமறை 
திருவள்ளுவர் அல்ல 


அவர்என்றுமே வள்ளுவத்தின் வழித்தோன்றலே...

வாழ்க வள்ளுவம்.

காதல் என்றால் என்ன?


உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? 
அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் 

பெருமை படைத்து இவ்வுலகு 

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

காமத்துப்பாலின் ஒவ்வொரு குறலும் காதலை அணுவணுவாக உணர்ந்து எழுதப்பட்டது என்பதற்கு வள்ளுவன் வாசகியின் வாழ்கை ஒன்று போதுமே...

காதல் என்பது இருபாலருக்குண்டான இனக்கவர்ச்சியன்று அது வாழ்வியல். இரு உள்ளங்களின் சங்கமம் வாழ்தலில் மட்டுமே உணரக்கூடிய தத்துவம் எதிர்பார்ப்புகள் இல்லாத எந்த உறவுக்குமே அழிவென்பது இல்லை காதலின் வெளிப்பாடு அன்புமட்டுமே...
வள்ளுவம் எதை சொல்லாமல் விட்டுவிட்டது சொல்லுங்கள்...
மனிதன் எப்படிவாழவேண்டும் என்று எப்படிவாழக்கூடாது என்று அனைத்தையும் சொல்கிறது வள்ளுவத்தை பின்பற்றுங்கள் 

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், வாழ்கையை ஒரு விளையாட்டாக எண்ணுகின்றவர்கள் வள்ளுவத்தின் வழி வாழ்ந்துபாருங்கள் வாழ்கையை நேசிக்க கற்றுக்கொள்வீர்கள்

காதல் நேசிப்பதில் இல்லை வாழ்ந்துக்காட்டுவதில் இருக்கின்றது

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வள்ளுவத்தின் வழியில்
வெ.ஜெ.ஹரிஹரசுதன் வள்ளுவன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை.

வள்ளுவம் என்பது எனது மதம் திருக்குறள் அதன் வழிக்காட்டி

வள்ளுவத்தை வள்ளுவம்பேசுகிறது...
===============================
என் அறிவார்ந்த சமுதாயமே.....
வணக்கம்,

அன்பையும் அறிவையும் மட்டுமே பகிர்ந்து பழகிய வள்ளுவமே...
இன்றைய அவசரக்காலத்தில் பணத்தைமட்டுமே தேடி அலைகின்ற மனித கூட்டங்களோடு ஒன்றாக கலந்து ஓடிகொண்டுதான் இருக்கின்றோம்.

இப்படிபட்டக்காலத்திலும் கலாச்சாரம் பண்பாட்டைக் கட்டிக்காத்து
அதனை நம் சந்ததிகளுக்கு எடுத்துச்செல்ல முற்படுகின்றவன்தான்
உண்மையான அறிவுடையவன் அறிவார்ந்தக் குலத்தைச் சேர்ந்தவன்

என்னதான் அறிவுடையவனாக சுயமாக சிந்திக்கும் திறமை இருந்தாலும் அவன் எத்தகைய கூட்டத்தோடு, நண்பர்களோடு, இனத்தோடு சேர்கின்றானோ அவற்றின் தன்னைமயில் அவன் அங்கு மாறிப்போகின்றான்.

ஓரு அறிவில்லாத கூட்டத்தோடும் சமுதாய அக்கறையற்ற கூட்டத்தோடும் சேர்கின்றவன் தனது அறிவை இழப்பதோடு அல்லாமல் நல்லவர்களுக்கு உதவாது மக்கிப்போகின்றான் 

என்ன அழகாக எம் குலத்தோன்றல் திருவள்ளுவர் சொல்கின்றார்
இப்படிபட்டவர்களின் பண்பை

குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.


பொருள்:

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.


Translation:

Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.

Explanation:
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

இங்கு வள்ளுவனை வள்ளுவக் குலத்தவனை சொல்கின்றார் திருவள்ளுவர் என்ன சொல்கின்றார்...
ஒருவன் நல் வாக்கு உடையவனனாக சமுதாயத்திற்கு நல் வழிக்காட்டுபவனாக இருக்க. அவன் அறிவானவனாக தன்னை காட்டிக்கொண்டாலும் அவன் எத்தகைய குலத்தில் இனத்தில் கூடியிருக்கின்றானோ அதன் தன்னைமயில்தான் அவனது அறிவு வெளிப்படும் என்கிறார் 

வள்ளுவன் வாக்கில் சிறந்தவன்,வள்ளுவன் பழகுவதில் இனிமையானவன், வள்ளுவன் சமுதாயத்தை நல் வழிபடுத்துபவன், வள்ளுவன் நேசிக்த்தெறிந்தவன், வள்ளுவன் நேர்மையானவன்,

இப்படிபட்ட குணம் பண்பாடு கலாச்சாரம் வள்ளுவனுக்கு எப்படிவந்தது
வள்ளுவத்தில் தோன்றியதால் வள்ளுவ மதத்தை பின்பற்றுவதால்
வள்ளுவன் வள்ளுவனாக வாழ்வதால்.... 

இப்படிப்பட்ட எம் குலம் இந்தமண்ணில் உள்ளதால்தான் 
அன்றும் இன்றும் இனி என்றும் இந்த பூமி உயிர்வாழ்கிறது

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை

V.J.Hariharasuthan Valluvan