Sunday 11 October 2015

மகாலய அமாவாசையும் வள்ளுவ குல அந்தனர்களும்


மகாலய அமாவாசையும் வள்ளுவ அந்தனர்களும்

எல்லா மதங்களும் இறைவனிடம் முன்வைக்கும் வேண்டுதல் மீண்டும் பிறவாவரம் வேண்டும் என்பதுதான் அப்படி என்ன இந்த பிறவிபற்றிய பயம் மக்களுக்கு ஏன்
இந்த உடலும் உயிரும் நமக்களித்தது நம் முன்னோர்களின் கருனையால் கிடைத்தது இந்த ஆன்மா எத்தனை சென்மம் எடுத்தது என்று யார் அறிவார் 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என்று சிவபுராணத்திலே 
மாணிக்கவாசகர் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி 

         என்று இந்தபப்பிறவியறுக்க பாடுபட்டு மனமுருகிவேண்டுகிறார் கடைசியாய் கிடைத்த இப்பிறவியை நல்ல பயனுள்ளதாக கழித்து பிறவியறுக்கவேண்டும் என்பது தான் இந்துமத வேண்டுதல்
இப்படிபட்ட இந்த பிறவியை துறந்த ஆன்மாக்களே நம்முன்னோர்கள் நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த மாபெரும் நிலப்பரப்பு குமரிக்கண்டம் என்னும் தமிழ் பூமி

நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்  " குமரிக்கண்டம் ". 

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது  பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது  தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன்  39 மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம், மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . 

இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெரும்பங்கு வகித்த வள்ளுவர்கள் இன்று எங்கே....? 


ஐயன் வள்ளுவன் மேற்கூறிய நம் மறைந்த முன்னோர்களின் வாழ்வயில் முறையை தனது மாபெரும் படைப்பான திருக்குறளில் பிரதிபளித்தார் இன்று அது அனைத்துலக மக்களால் போற்றப்படுகின்றது   



குறள்: 43 
பால்:             அறத்துப்பால்   (Arathuppal)–Virtue 
இயல்:          இல்லறவியல்  (Illaraviyal)-DomesticVirtue 
அதிகாரம்: இல்வாழ்க்கை  (Ilvaazhkkai)-DomesticLife 

குறள்:   தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்தானென்றாங்கு 
                 ஐம்புலத்தாறுஓம்பல்தலை.

பொருள்: 
 தென்புலத்தார், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான்என்னும் ஐந்துவகையாளரிடத்தும் செய்யவேண்டிய அறச்செயல்களைத்தவறாமல் ஒருவன்செய்தல் சிறந்தகடமையாகும். என்று
மனிதவாழ்வியலின் மாபெரும் கடமையாக கூறுகின்றார் இதைத்தான் இந்துமதம் 
மனிதன் தான் பிறக்கும்போது ஐந்து கடமைகளை தன்னோடு சேர்த்துவருவதாக 
1. பித்ரு கடன் (முன்னோர்களுக்கு நாம் ஆற்றத் தவறிய கடன்)
2. தெய்வ கடன் 
3.  தேவக் கடன்
4. மனஷ கடன்
5. பூத கடன்  

என்று இந்த கடனையெல்லாம் தீர்த்தாலொழிய மனிதபிறவியை அறுக்க இயலாது என்பதுதான் இந்துமதகோட்பாடு 3500 ஆண்டுகளுக்கு முன் ஐயன் வள்ளுவன் வகுத்த கோட்பாடுதான் இவை என்பதை அறிவீர்களா......

மாகாளய அமாவசை என்பது புரட்டாசியில் வரும் பௌர்ணமி முதல் அமாவாசைவரை வரும் பட்சம் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் வரும் காலம் மகாலய அமாவாசை 
வாழ்கையில் நாம் மனிதபிறவியில் செய்த பாவங்கள் பல அவற்றில் பெரிய பாவம் என்னவென்றால் அது  நாம் நம் முன்னோர்களுக்கு செய்யத் தவறிய கடமைகள், அப்படிப்பட்டக் கடமைகளை செய்யத்தவறியதன் காரணமாக மீண்டும் பிறவியெடுத்து இந்த பிறவியில் நம் தாய் தந்தையிருக்கும் நம் தாத்தா பாட்டிகளுக்கு செய்யும் கடமைகளை செவ்வனே செய்து முன்னோர்களுக்கு தவறாது சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்வதனால் நாம் நமது பிதுர் தோஷம் என்னும் நீத்தார் கடன் தீர்த்தல் ஆகும்
அப்படிப்பட்ட இந்த புனிதமான சடங்கினை கற்றுதேர்ந்தவர்கள் வள்ளுவ அந்தனர்கள்,  ஒவ்வொரு பிறவியிலும் நாம் சுமந்துவரும் மிக உயரியதும், அழிவற்றதுமாகிய முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றதுமாகிய "ஆன்மாவை "மீண்டும் இறைவனடி சேர்க்கும் புனிதக் கலையை செவ்வனே செய்பவர்கள் வள்ளுவ அந்தனர்கள் 
அப்படி அனுப்பபட்ட முன்னோர்களின் ஆன்ம சக்தி மகாளய பட்சம் என்னும் காலத்தில் தனது சந்ததிகளை காண வருவதாக நம்பிக்கை  அப்படிபட்ட காலத்தில் நாம் நமது முன்னோர்களுக்கு செய்யும் திதி மற்றும் தர்ப்பணமாவது மிக சிறந்தது 

1. நீர் 
2.எள்
3.தர்ப்பை

இவற்றை மட்டுமே வைத்துகொண்டு ஆன்மாவை மகிழ்விக்த்தெறிந்தவர்கள் வள்ளுவ அந்தனர்கள் மட்டுமே அனைத்திற்கும் ஆதாரம் நீர், பெருமாளின் உடலிலிருந்து உற்பத்தியான தாதுதான் "எள்" தர்ப்பை தாமிரத்தைவிட பல மடங்கு சக்தியையும் அதிர்வலைகளை கடத்தவல்லது இவைகளைக்கொண்டு நம் வள்ளுவ முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த மனிதபிறவியின் பாவங்களை கழித்துவந்தனர் அப்படி செம்மையாக்கப்பட்ட தமிழினம் அறிவிலும் விஞ்ஞானத்திலும் ஆன்மீகத்தாலும் உலகையே ஆண்டுவந்தது என்றைக்கு வள்ளுவ குல அந்தனர்கள் புறக்கணிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து தமிழினம் மாபெரும் வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கத்தொடங்கியது.... இந்த நிலையை மாற்றவேண்டுமெனில் மீண்டும் வள்ளுவ குல அந்தனர்கள் தங்களின் நிலையை மீட்டெடுக்கவேண்டும் 


மாகாளய பட்சத்தில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

 பௌர்ணமி - பெண்களுக்கு மனோபலத்தையும் சக்தியையும் கொடுக்கும்
 
1. பிரதமை - வெல்லம் தவிடு உருவிய அகத்துக்கீரை  கடன் நீங்கி தனலாபத்தை தரவல்லது
 
2. துவிதியை - மக்கட்ச் செல்வம், சந்ததிபெருகுதல்

3. திருதியை - நியாயமான விருப்பங்கள், தடைபட்ட காரியங்களில் வெற்றி 

4. சதுர்த்தி - எதிரகிளினால் வரும்தொல்லை நீங்கி மனோதைரியம் அடைதல்

5. பஞ்சமி - செல்வம் ஆத்தி பூர்வீக சொத்து அடைதல்

6. சட்டி - புகழும் உயர்வும் நன்மதிப்பும் கிடைத்தல்

7. சப்தமி - தலைமைப் பதவி பதவி உயர்வு அரசுப் பணி கிடைத்தல்

8. அட்டமி - புத்தி பெருகுதல், கல்வியில் மேன்மை குடும்பத்தில் காணாமல் போனவர்களுக்கான திதியாகும் இவை வெகுகாலம் தடைபட்டுவரும் திருமணத்தை நடத்திவைக்கும்

9. நவமி - திருமணதடை நீங்கும், கனவன் மனைவி அன்பும் உறவும் மேன்மைபடும்

10. தசமி - ஆத்ம சாந்தி, நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும்

11. ஏகாதசி - வேதங்களும் நற்கலைகளும் கல்வியில் ஞானமும் கிடைக்கும்

12. துவாதசி - தங்கம் ஆபரணங்கள் நவரத்திணங்கள் இல்லத்தில் பெருகும்
குடும்பத்தில் திருமணமாகாமல் உயிர்நீத்தவர்கள், துறவரம் கண்டு உயிர்நீத்தவர்களுக்கு திதி கொடுக்க சிறந்த நாள் மகா புண்ணியம்

13. திரியோதசி -சூரியன் உத்திரம், அசத்தம், சித்திரை நட்சத்திரங்களில் நிற்க 
சந்திரன் மகம் நட்சத்திரத்தில் நிற்க வரும்காலம் (கஜச்சாயா) என்னும் சிறந்த நாள் இந்த நாளில் தாயார் வர்க்கத்தினருக்கு திதிகொடுத்தல் சாலச்சிறந்தது. நோயற்ற நிலை, லட்சுமிகடாட்சம், புத்தி, கால்நடை வளம் பெறுக நன்று

14. சதுர்த்தசி -விபத்து, துர்மரணம், ஆயுதத்தால் மரணம், கொலையுண்டவர்களுக்கு திதி கொடுக்க 

15. மகாளய அமாவாசை - சந்திரன் பரணி நட்சத்திரத்தில் வரும் காலம் "மகா பரணி " 
காலம் அன்றைய யோகம் வியதீபாத யோகம் இன்றைய தினம் நாம் கொடுக்கும் திதி மற்றும் தர்ப்பணம் மேலே சொல்லபட்ட அத்தனை திதிகளுக்கான பலன்களை அளிக்ககூடியது  இந்த நாள் இறைவன் நமக்களித்த மாபெரும் பாவமன்னிப்பு நாள் இப்படிபட்ட நன்னாளில் பாரம்பர்ய தமிழ்குடியின் முதல் குடியான அறிவும் ஆற்றலையும் தனது மரபனுவில் கொண்டுள்ள வள்ளுவ குல அந்தனர்களை வைத்து திதியும் தர்ப்பணமும் கொடுக்க மீண்டும் பிறவா வரம் பெறலாம்
வாழ்க வள்ளுவம் வளர்க எம் குலம்