Wednesday 31 July 2013

வள்ளுவம் கடந்துவந்த பாதை (வரலாறு)

வள்ளுவம் கடந்துவந்த பாதை (வரலாறு)
================================

கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற ஜைன நூலான சீவகசிந்தாமணி (பா. 1234) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து ஈனராய்ப் பிறந்தது.

அதாவது, எயினர் (மறவர்) போன்ற இழிந்த குலத்தில் ஒருவன் பிறப்பது அவன் முற்பிறப்பில் உயிர்களைக் கொன்ற பாவத்தினால்தான் என்பது இதன் பொருளாகும். பிற உயிர்களைக் கொண்று தின்னுதல் மிக இழிவான பழக்கமாகக் கருதப்பட்டதால் அத்தகைய கொலைத் தொழிலையே தங்கள் வாழ்வியலாகக் கொண்டிருந்த மறவர், குறவர் போன்ற இனத்தவர்கள் பெளத்த, ஜைனர்களால் இழிகுலத்தவராகக் கருதப்பட்டனர். சீவகசிந்தாமணி வேறோரிடத்தில் (பா. 2741) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

வில்லின் மாக் கொன்று வெண்ணிணத் தடி விளிம்படுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.

பரதவர் முதலிய மீனவர் சமூகத்தவரும் இழிகுலத்தவராகக் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

வைதிக இந்து சமயத்தின் மிக உயர்ந்த வர்ணத்தவராகக் கருதப்பட்ட பிராம்மணர்கள் புலால் உணவை விட்டொழித்தவர்கள் அல்லர். ஜைன, பெளத்த சமயத் தாக்கத்தினால்தான் புலால் உண்ணும் வழக்கத்தை மாற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. எனவே, உபநிடதங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வைதிக சமயம், கொலைத் தொழில், புலால் உண்ணுதல் போன்ற பழக்கங்களின் அடிப்படையில் சாதிய உயர்வு தாழ்வினைக் கற்பித்தது என்பது தர்க்கபூர்வமான ஒன்றல்ல. ஜைன, பெளத்த சமயங்களின் தாக்கத்தால் மட்டுமே வைதிக இந்து சமயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உட்புகுந்து நிலை பெற்றிருக்க வேண்டும். பெளத்த சமயம், பிராம்மண வர்ணத்தவரின் ஆதிக்கத்துக்கு எதிரானது என்ற கருத்து சரியானதே. ஆனால், க்ஷத்ரிய, பிராம்மண, வைசிய, சூத்ரர் என்ற சமூகப் படிநிலையையே பெளத்தம் முன்னிறுத்தியது என்பதையும்,

“வள்ளுவ பார்ப்பனர்" வள்ளுவர் குலத்தாரையும், 

“வேளாப் பார்ப்பனர்" எனப்பட்ட விஸ்வ பிராம்மணர் (கண்மாளர்)களையும், அருந்தவர்களையும் (தபஸ்விகள்) பிராம்மணர்களுக்கு மாற்றாக ஏற்றிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுகளில் உருவான சைவ, வைணவ பக்தி இயக்கம் சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்த முயன்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று முழங்கிய அப்பர் பெருமானும், "குலந்தாங்கு சாதிகள் நாலினும் கீழ்ப்பட்டு எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளராயினும் திருமாலுக்கு அடியாராயினால் உயர்வடைவர்" என்ற ஆழ்வார் பாடலும் பிரச்சார நோக்கத்தில் வீசப்படும் மாயத் தூண்டில்கள் என்றே கொண்டாலும்கூட தர்க்கபூர்வமான பெளத்த ஜைனர்களின் ஊழ்வினைக் கோட்பாட்டுக்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட சரணாகதியினால் உயர்வடைதல் என்ற அடையாளமே என்பது ஐயத்துக்கு இடமற்ற உண்மையாகும். இவற்றால் என்ன பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால், வைதிக இந்து சமயம்தான் சாதியமைப்பை உருவாக்கிக் கட்டிக்காத்தது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே இம்மேற்கோள்களை எடுத்துக்காட்ட நேர்ந்தது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், "ஐயா, நாங்கள் தாழ்ந்த மறக்குலத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தம்மிடம் அறிமுகம் செய்துகொண்ட பொன்னனையும், பொன்னாச்சியையும் தம் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஆதர்சமான வைணவர்களாக முன்னிறுத்திக் காட்டினார். பொன்னனுக்குப் ‘பிள்ளை உறங்காவில்லி தாசன்’ என்ற தாஸ்ய நாமம் வழங்கியதோடு, அவனது தோளில் தமது கையைப் போட்டுக்கொண்டு நடப்பது குறித்து உயர்குல அடியார்கள் கேள்வி எழுப்பியபோது "உத்தமமான அந்த வைணவனைத் தொடுவது ஒரு ஸ்பரிசவேதி (தொட்டால் தங்கமாக்கும் ரசவாதம்)" என்றும் கூறியவர் ராமானுஜர். அதுமட்டுமின்றி பிள்ளை உறங்காவில்லி தாசன், அகளங்கநாடன் எனப்பட்ட விக்கிரம சோழனின் மெய்க்காவலனாகப் பணிபுரிவதன் மூலம் கிடைத்த ஊதியத்தைக் குருதட்சிணையாகக் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்து, உயர்குடிப் பாரம்பரியப் பெருமித உணர்வுடைய அரசர்களால் ஈட்டப்பட்ட பொருள் பாப திரவியம் என்றும் குறிப்பிட்டவர் ராமானுஜர்.

இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகப் புலப்படும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அவற்றோடு சார்ந்த பொருளியல் நலன்கள் என்பவை நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஆட்சியமைப்புகளும் அதிகார வர்க்கமும் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகளின் விளைவுகளே; (வைதிக) இந்து சமயமும், ஜைன, பெளத்த சமயங்களும் அவ்விளைவுகளுக்குப் பின்னேற்பு (ratification) வழங்கிய குற்றத்தை மட்டுமே செய்தன என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பெளத்த சமயம் இன்றைய வஹாபிய இஸ்லாத்தின் ஜமாத் போல சங்கம் என்ற அமைப்பின் மூலம் ஆட்சியதிகார அரசியலை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை, அரசர்களுக்கே அது பெரும் சவாலாக இருந்ததால் கி.பி. 7-8ஆம் நூற்றாண்டளவிலேயே பெளத்தம் இந்தியாவை விட்டு விரட்டப்பட்டது.

வள்ளுவ குல வரலாற்று ஆய்வுக்கான தேடலில் கிடைத்த தகவல்கள்
உங்கள் பார்வைக்கு
வாழ்க வள்ளுவம்.

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை.

10 comments:

  1. பார்ப்பான் என்ற தமிழ் வார்த்தையோடு தொடர்பு படுத்தப்படும் ஒரே சாதி பறையன் என்பதுதான். வழக்காருகளும், நாட்டார் கதைகளும், வரலாறும் கூட அதைத்தான் சொல்லுது.

    நீங்க என்ன திடீர்-னு வள்ளுவ பார்ப்பான்-னு கிளம்பி இருக்குறீங்க???

    பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் என்ற சொல்வழக்கும். அது சொல்லும் நாட்டார்கதையிலும். ஆலயத்தில் அர்ச்சகராக இருந்த அண்ணன். சிவனுக்கு படையல் செய்ய வைத்திருந்த இறைச்சியை மனைவிக்கு கொடுத்ததால் ஊர் மக்களால் ஆலயத்தில் இருந்து நீக்கப்பட்டு அவன் தம்பி பார்ப்பானாகினான் என்பதுதான்.

    அண்ணன் பறையனின் தம்பியும் பறையன் தானே? அது மட்டுமல்ல பல்வேறு பொய் புராண புரட்டுகளில் கூட பறையரும் பிராமணரும் தான் பினைக்கப்பட்டிருப்பார்களே ஒழிய வள்ளுவர்கள் இல்லை.

    ReplyDelete
  2. வள்ளுவர்களின் தொழில் என்ன?

    சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் என்ன சொல்லுது? இடைக்கால இலக்கியமான சீவக சிந்தாமணி என்ன சொல்லுது? கம்ப ராமாயணம் என்ன சொல்லுது? நிகண்டுகள் என்ன சொல்லுது?

    எங்காவது வள்ளுவர்கள் சோதிடம் பார்ப்பவர்கள் என்று குறிப்புள்ளதா? ஆதாரத்தோடு விளக்க இயலுமா?? ஆனால் வள்ளுவர்களை சோதிடம் கற்றவர்கள் என்று சொல்லும் ஒரே வரலாற்று ஆதாரம் ஞானவெட்டி-தான்.

    அதில் முந்தி பிறந்தவன் நான், முதல் பூணூல் தறித்தவன் நான், சங்கு பறையன் நான், சாதியிலே மூத்தவன் நான் என்கின்றார் அந்நூலை எழுதிய வள்ளுவர் ஒருவர்.

    ஆக பறையனே பார்ப்பான். வள்ளுவன் அல்ல!!!

    ReplyDelete
  3. எட்டாம் திருமுறை என்ன சொல்லுது? நாத வள்ளுவன் என்றா? கீழ்காணும் பாடலை பாருங்க!

    திருச்சிற்றம்பலம்

    வேத மொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
    நாதப் பறையினர் அன்னே என்னும்
    நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
    நாதர் இந்நாதனார் அன்னே என்னும்.

    திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
  4. வேளான் - திருவாங்கூரில் பறையர் “வேளான்” என்று அழைக்கப்படுவர். தென்னிந்திய குலங்களும், குடிகளும் பக்;. 116.
    http://noolaham.net/project/04/352/352.htm

    எனில் வேளாப் பார்ப்பான் என்பது சங்குபறையனை குறித்ததன்றோ?

    ReplyDelete
  5. https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-470261679820038/?ref=bookmarks

    பறையர் யார்? ஒரு வரலாற்று பார்வை நீங்க கீழ்காணும் முகப்புத்தக பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். கி.பி. 1950 களுக்கு பிறகு தமிழக அரசு வள்ளுவர், திருவள்ளுவர்-னு தனித்தனியா ரெண்டு சாதிச்சான்றிதழ்களை உருவாக்கிட்டா. அதுவே வள்ளுவ திருவள்ளுவர்களின் அடையாளமாகிவிடாது!

    அந்த சான்றிதழை வைத்து பல்லாயிரம் ஆண்டு பறையர் வரலாற்றை வள்ளுவர் வரலாறாக மாற்றிவிட முடியாது!!

    ReplyDelete
  6. பார்ப்பான் என்ற தமிழ் வார்த்தையோடு தொடர்பு படுத்தப்படும் ஒரே சாதி பறையன் என்பதுதான். வழக்காருகளும், நாட்டார் கதைகளும், வரலாறும் கூட அதைத்தான் சொல்லுது.

    நீங்க என்ன திடீர்-னு வள்ளுவ பார்ப்பான்-னு கிளம்பி இருக்குறீங்க???

    பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் என்ற சொல்வழக்கும். அது சொல்லும் நாட்டார்கதையிலும். ஆலயத்தில் அர்ச்சகராக இருந்த அண்ணன். சிவனுக்கு படையல் செய்ய வைத்திருந்த இறைச்சியை மனைவிக்கு கொடுத்ததால் ஊர் மக்களால் ஆலயத்தில் இருந்து நீக்கப்பட்டு அவன் தம்பி பார்ப்பானாகினான் என்பதுதான்.

    அண்ணன் பறையனின் தம்பியும் பறையன் தானே? அது மட்டுமல்ல பல்வேறு பொய் புராண புரட்டுகளில் கூட பறையரும் பிராமணரும் தான் பினைக்கப்பட்டிருப்பார்களே ஒழிய வள்ளுவர்கள் இல்லை.
    இந்த ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். வழக்கம் போல பதில் சொல்லாமல் ஏன் கமெண்ட்டை நீக்கிவிடாதீர்கள் ,அது சரியான பழக்கம் இல்லை

    ReplyDelete
  7. வள்ளுவர்களின் தொழில் என்ன?

    சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் என்ன சொல்லுது? இடைக்கால இலக்கியமான சீவக சிந்தாமணி என்ன சொல்லுது? கம்ப ராமாயணம் என்ன சொல்லுது? நிகண்டுகள் என்ன சொல்லுது?

    எங்காவது வள்ளுவர்கள் சோதிடம் பார்ப்பவர்கள் என்று குறிப்புள்ளதா? ஆதாரத்தோடு விளக்க இயலுமா?? ஆனால் வள்ளுவர்களை சோதிடம் கற்றவர்கள் என்று சொல்லும் ஒரே வரலாற்று ஆதாரம் ஞானவெட்டி-தான்.

    அதில் முந்தி பிறந்தவன் நான், முதல் பூணூல் தறித்தவன் நான், சங்கு பறையன் நான், சாதியிலே மூத்தவன் நான் என்கின்றார் அந்நூலை எழுதிய வள்ளுவர் ஒருவர்.

    ஆக பறையனே பார்ப்பான். வள்ளுவன் அல்ல!!!

    இந்த ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். வழக்கம் போல பதில் சொல்லாமல் ஏன் கமெண்ட்டை நீக்கிவிடாதீர்கள் ,அது சரியான பழக்கம் இல்லை

    ReplyDelete
  8. எட்டாம் திருமுறை என்ன சொல்லுது? நாத வள்ளுவன் என்றா? கீழ்காணும் பாடலை பாருங்க!

    திருச்சிற்றம்பலம்

    வேத மொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
    நாதப் பறையினர் அன்னே என்னும்
    நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
    நாதர் இந்நாதனார் அன்னே என்னும்.

    திருச்சிற்றம்பலம்

    இந்த ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். வழக்கம் போல பதில் சொல்லாமல் ஏன் கமெண்ட்டை நீக்கிவிடாதீர்கள் ,அது சரியான பழக்கம் இல்லை

    ReplyDelete
  9. வேளான் - திருவாங்கூரில் பறையர் “வேளான்” என்று அழைக்கப்படுவர். தென்னிந்திய குலங்களும், குடிகளும் பக்;. 116.
    http://noolaham.net/project/04/352/352.htm

    எனில் வேளாப் பார்ப்பான் என்பது சங்குபறையனை குறித்ததன்றோ?

    இந்த ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். வழக்கம் போல பதில் சொல்லாமல் ஏன் கமெண்ட்டை நீக்கிவிடாதீர்கள் ,அது சரியான பழக்கம் இல்லை

    ReplyDelete
  10. https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-470261679820038/?ref=bookmarks