Saturday 7 December 2013

தென்னகக் கோயில்களில் வள்ளுவர்களின் பங்கு

தென்னகக் கோயில்களும் வள்ளுவர்களும்
=================================================
      


            உயரிய பண்பாட்டுக் கலாச்சாரத்தின் முன்னோடிகளாகத் திகழுகின்ற தமிழின மக்களின் ஆன்மீக உணர்வே இன்றளவும் போற்றத்தக்கதாக இருக்கின்றது. தென்னக கற்கோயில்கள் தமிழனின் உயர் கட்டிட தொழிற்நுட்பத்தின்  உச்சத்தை உலகிற்க்கு பரைச்சாற்றுகிறது இத்தகைய சிறப்பிற்க்கு வள்ளுவர்களும் பெரும்பங்காற்றினார்கள்.

வள்ளுவக் குலத்ததின் தொன்மையை பறைச்சாற்றும் பல இலக்கிய சான்றுகள்

1. “வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னற்குள்பாடு கருமந் தானவர்க்கொன்றும்” - திவாகரம்

2. “வள்ளுவர் முரசமுது ரரைக்கென வருளினானே” - சீவக சிந்தாமணி – 2149 

3. “வாய்ந்த வந்நிரை வள்ளுவன் சொனான்” - சீவக சிந்தாமணி – 419 



கல்வெட்டு:1

கேரளாவில் உள்ள பொன்னானி வட்டத்துச் சுகபுரம் என்னும் ஊரிலுள்ள கல்வெட்டொன்று பின்வருமாறு கூறுகிறது

“சொகிரத்துப் படையாகும்……. இராயசேகராயின
வள்ளுவரும் கூடிச்செய்த கச்சமாவது”
என்பதே அது.

“புக்காட்டூர் ஊர் சபையோரும், வள்ளுவர்களும், கோயில் அதிகாரிகளும் சேர்ந்து இறைவனுக்குத் திருப்பணிசெய்தனர்” என்பதே அது.

       சங்க இலக்கியங்களில் தமிழக்கோயில்களில் இறைத்தொண்டாற்றி ஆலய நிர்வாகத்தை வள்ளுவர்கள்தான் மேற்கொண்டனர் என்பதற்கான இலக்கியச்சான்றுகள் ஏராளமாக உள்ளன.

ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 

செந்தண்மை பூண்டொழுக லான். 
                                                                   – திருக்குறள்

       எல்லா உயிர்கள்மீதும் அருளுடையவராக நடந்துகொள்வதால், அந்தணர் என்று சொல்லப் பெறுபவர் பற்றினைவிட்ட துறவியர் ஆவர். அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர் என்பது குறளின் பொருள்



        வள்ளுவர்கள் அரச குருவாகவும், கல்விபோதிக்கும் ஆசிரியனாகவும் மக்களுக்கு கோள்நூலின் துணைக்கொண்டு நல்ல நாள், கரிநாள், சுப நிகழ்ச்சிக்கான ஓரைகள் போன்றவற்றை கணித்துக்கூறும் “கணியர்களாவும்”, வெள்ளிக்கோளின் (சுக்கிரன்) இயக்கமறிந்து இயற்கைச்சீற்றத்தினையும், மழைபற்றிய தகவல்களையும் மக்களுக்குத் தெறிவித்துவந்த “அறிவனாகவும்” இருந்துவந்தனர்.

தொல்காப்பியம் அறிவன் சமுகத்தை இரு பிரிவுகளாக கூறுகிறது

1. அறிவன்

2. கணியன்

       
 இந்த இரண்டு பிரிவினர்களை உள்ளடக்கியதுதான் வள்ளுவ குலம். ஆக அந்தணர் எனப்படும் அறிவோர் அறிவன், கணியன் என்கின்ற வள்ளுவக் குலத்தாரையே குறிக்கும்.

          இன்றைக்கு ஆசீவகத்தின் மூலத்தைக் கருவாகக்கொண்ட இந்துமதத்தின் மிகப்பெரும் பிரிவுகளாகிய சைவம் மற்றும் வைணவத்தினை வள்ளுவ குல மக்கள் பின்பற்றுகின்றனர் அவையே வள்ளுவத்தின் இரு கோத்திரங்களான நாயனார்கள் மற்றும் ஆழ்வார்கள்



            இன்றைக்கு மிகப்பெரிய சிவாலயமான தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம் தில்லை நடராசப்பெருமான் ஆலயத்தின் வழிபாட்டுமுறையானது சங்கம வழிபாடு 

அவதாரத் தலம் : தில்லை (சிதம்பரம்).
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : திருப்புல்லீச்சரம் (தில்லை - சிதம்பரத்தில் உள்ள ஒரு                                                                     தலம்).
குருபூசை நாள் : தை - விசாகம்.



சங்கம வழிபாடு என்பது என்ன?
=========================

           சைவ சமயத்தின் இரு வழிபாடாகிய குரு, சங்கம வழிபாடு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த வழிபாடாகும். சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று இறைவனுடைய திருவருளைக் குருவின் மூலமாகத்தான் பெற முடியும் என்பதாகும். குரு என்பவர் உயிர்களின் பாசங்களை நீக்குபவர் ஆவார்.


             குருவிடம் ஞான நூல்களைக் கேட்கும் பொழுது பக்தியுடன் இருந்து கேட்க வேண்டும். குருவின் உபதேசப்படி ஒழுக வேண்டும். குருவிற்குச் செய்யும் தொண்டே சிறந்த தொண்டாகும். குருவை வழிபட்டு அருள் பெற்றவர்கள் மாணிக்கவாசகர், திருமூலர், மங்கையர்க்கரசியார், அப்பூதியார் ஆகிய அடியார்கள் ஆவர். 

            குரு வழி உபதேசம் என்பது காலம் காலமாக வள்ளுவ குலத்தில் இருந்துவந்துள்ளது இன்றைக்கு சோதிடத்தில் மிகப்பெரும் பிரிவான காண்ட சோதிடம் (நாடிசோதிடம்) இதன் அடிப்படையிலேயே போதிக்கப்படுகிறது இக்கலையானது வள்ளுவ குலத்தார்க்கு மட்டுமே சித்தமாகின்ற ஒன்று. 

        தில்லை வாழ் அந்தணர்தம் ஆயிரம் என்று தான் வரலாறு கூறுகிறது தில்லைவாழ் தீட்சிதர் ஆயிரம் என்று எவ்விடத்திலும் காணப்படவில்லை, தில்லை நடராசப்பெருமானின் ஆலயத்தை வள்ளுவர்களும் நிர்வகித்துவந்துள்ளனர்.


        சிதம்பரம் மேலரத வீதியிலுள்ள சொத்துக்கள் வள்ளுவர்கள் நிர்வாத்தில்தான் இருந்துள்ளது அதில்வரும் வருமானத்தைவைத்து ஆலய திருப்பணிகளைக் கவனித்துவந்துள்ளனர் 


        தைமாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் தில்லை நடராசருக்கு ஒரு மண்டகப்படி வள்ளுவ குலத்தவர்களுடையது, சிதம்பரத்தில் அருகிலுள்ள தில்லைவடங்கன் என்ற கிராமத்தில் வாழும் வள்ளுவர்களிடம் அதற்கான செப்பேடு இருந்துள்ளது. என்பது வாய்வழித்தகவல் 


        அதுபோல திருமுட்டம் பூவராகவசாமி திருக்கோயில் வள்ளுவர்களின் ஆழ்வார் கோத்திரத்தினர் நிர்வகித்துவந்துள்ளனர் 1000 வருடத்திய அரசமரம் அங்கு உள்ளது.


        குழந்தை இல்லாத இல்லத்தரசிகள் குழந்தைவரம்கேட்டு வழிபடும் தலமாக இருக்கிறது இந்த ஆலயத்தில் “அரசடி விழா” என்னும் விழாவை வள்ளுவர்கள் நடத்திவந்துள்ளனர் அந்த விழா வள்ளுவர்களுக்கு உரித்தானது என்பதற்கான செப்பேடுகளும் இருந்துள்ளன.


ஆன்மீகமும் குருத்துவமும் வள்ளுவர்களின்று பிரிக்கமுடியாத ஒன்றாக காலம் காலமாக இருந்துவருகிறது இன்றைக்கு இந்தகுலத்தின் நிலைஎன்ன….??? 

         நமக்குறிய உரிமைகளையும், பெருமைகளையும் இழந்துவரும் நாம் இனியும் இன உணர்வற்றவர்களாக இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் வள்ளுவம் என்ற குலம் இருந்தது என்று வரலாற்று புத்தகங்களில் கூட இடம்பெறாமல் போய்விடுவோம். விழித்தெழுங்கள், வள்ளுவர்களாக ஒன்றிணையுங்கள் வள்ளுவ குலத்தை வாழவையுங்கள். 

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!
அறிவன். வெ.செ.அறியரசுதன்
உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை அறக்கட்டளை
9994724447, 9994799952, 8220025363, 9566551805

Sunday 18 August 2013


உலக வள்ளுவ குல இளைஞர் தலைவர்
=====================================
 அவர்களின் உரை (19.08.2013)
==========================
சாதிவெறி எங்களுக்கு இல்லை... 
தமிழனின் வரலாற்றைச்சொல்ல வேறு வழியும் இல்லை ஆதலால் கூறுகின்றோம் உலகத்தின் தொன்மையான மதம் வள்ளுவம் உண்மையான தமிழன் வள்ளுவனென்று...
                                                                    -ஹரி வள்ளுவன் 

இன்று என்னிடம் ஒரு அன்பர் கேட்டார் திருவள்ளுவர் என்பவர் முற்போக்குவாதி நீங்களும் அப்படிபட்டவர் ஆனால் இன்று நீங்களோ ஒரு குறிப்பிட்ட(உங்கள்) சாதியின் இளைஞர் பேரவை தலைவராக இருக்குறீர்கள்  உங்கள் மக்களை மீண்டும் பிற்போக்கான வழிக்கு கொண்டு செல்கின்றீர்கள் என்று....

இதற்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும் எப்படி சொல்லவது....
ஆதலால் சொல்கின்றேன் நாங்கள் யாறென்று

வள்ளுவன் என்பது சாதியல்ல அது ஒரு வாழ்வியல் நெறி அதனை பின்பற்றுபவன் வள்ளுவன் எனவே அவன் அவ்வாறு அழைக்கப்பட்டான்
வள்ளுவன் என்பவன் அறிவுடையவன் சான்றோன் இன்றுவறை அதனால்தான் சாதி என்ற வார்த்தையை நாங்கள் எங்கும் பயன் படுத்துவதில்லை... வள்ளுவ குலம் என்றுதான் சொல்லிவருகிறோம் ஏன் தெறியுமா?

ஓரு சிறந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பின் பற்றி அதன்படி வாழ்ந்து வரும் ஓழுக்கமான ஓரு கூட்டம் அதன் படி தன் வாழ்வியலை அமைத்துகொள்ளும் அறிவார்ந்த மக்களின் ஒருங்கிணைப்பை இப்படி அழைக்கலாம் அதுதான் "குலம்"

கணித முறைகோட்பாட்டிலும் இதற்கு அர்த்தம் அதுவே....
 இயற்கணித அமைப்புக்கள் பற்றி ஆராயும் நுண் இயற்கணிதத்தின் ஒரு பிரிவு "குலம்" இது ஆகும்.

 வள்ளுவம் என்பது ஒரு குலம் அதற்கென்றுஒரு தனித்துவம் உண்டு அந்த மக்களுக்கென ஒரு பண்பாடு கலாச்சாரம் உண்டு

சாதி என்ற அதர்மத்தை நாங்கள் ஏற்கவில்லை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது குலத்தில் இல்லை, 

சாதிபற்றி போதிக்கும் அனைவரும் தங்களின் உண்மையான வரலாற்றை ஆய்வுசெய்யுங்கள் எந்த சாதியும் உயர்வு தாழ்வை போதிக்கவில்லை ஆதரிக்கவும் இல்லை.

 சாதி என்பது வர்ணா சிரமக் கொள்களையினால் வந்ததென்பது உண்மை இன்று உங்களை எவ்வாறு அழைத்துக்காள்வீர்கள் எல்லா சாதியினரும் எல்லாலத் தொழிலும் கற்றுத் தேர்ந்தவர்கள்,

 அப்படியானால் டாக்டர் தொழில் செய்பவர்கள் டாக்டர்சாதி, இன்ஜினியர் எல்லாம் இன்ஜினியர் சாதி, வக்கீல்கள் எல்லாம் வக்கீல் சாதி, திருடுபவன் எல்லாம் திருடன் சாதி, பிறர் பொருளை உழைக்காகமல் அபகரிப்போர் கொள்ளைகார சாதி, அரசியல் வாதி எல்லாம்....? 

சாதி என்பதை இன்றைக்கும் நாங்கள் ஏற்கவில்லை நாங்கள் ஓரு குலம் சார்ந்தவர்கள் வள்ளுவம் எங்களின் வாழ்வியல் நெறி

எவன் ஒருவன் மற்றொருவனை ஏறிமிதித்து தான் உயரவேண்டும் என்று நினைக்கின்றானோ அவனது எண்ணமும் உழைப்பும் தான் மிதித்துகொண்டுள்ளதாக நினைக்கின்றவன் மீதுதான் (தாழ்ந்தே) இருக்கும்
மிதிப்ட்டுள்ளவனாக நினைக்கும் அவனது நினைவு மேலே உள்ள வனை நோக்கியிருக்கும் (உயர்ந்து)  மேலே எழுவதற்கான உத்வேகம் இருக்கும் இதுதான் வாழ்வியலின் தத்தவம்

வள்ளுவம் சொல்வது 3 குலம் 1. வலிமைபடைத்தோர் (அறமுடையோர்), 2. சான்றோர் (அறிவுசார் குலம்) 3. சராசரி மக்கள் அதாவது லவ்கீக வாழ்கை வாழ்பவர்கள் இவர்களுக்காக பாடுபடும் கூட்டமே 1 மற்றும் 2

அறம்,பொருள், இன்பம்
அரசியலார்கள், சான்றோர்கள், குடிமக்கள்

இந்த 3 க்கும் 3 அதிகாரங்கள்  மன்னன், மந்திரி, மக்கள் இந்த 3 குலம் மட்டும்தான்  மனிதகுலம்

திருவள்ளுவன் அன்றே இதைதானே சொன்னார்கள்
1330 குறல் வரிகளிள் எங்காவது சாதியைபற்றியோ...
அதன் பொருட்டுத்தோன்றும் தீண்டாமைபற்றியோ..
முடநம்பிகை ஆதரிக்கும் விதமாக இருக்கிறதா?

ஒரு வரியையாவது  உங்களால் குறைசொல்ல முடியுமா இந்து, இஸ்லாம், கிருத்துவம், பௌத்தம் எம்மதமும் ஏற்கவல்ல ஒரு நன்நெறி வள்ளுவம் மட்டும்தான்

வள்ளுவம் என்பது கடினமான ஒன்று இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஆழமாக போதிப்பது பல 100 ஆண்டுகள் கடந்து வந்தும் இன்றளவும் மங்காத புகழைகொண்டுள்ள ஒன்று

அதன் வழித்தோன்றல்கள் நாங்கள் தமிழனென்ற கர்வம் எங்களுக்கு அதிகம் உண்டு தமிழனின் வரலாற்றை வள்ளுவன் இன்றி யாரும் ஏற்க முடியாது நான் சாதியை கையில் எடுக்கவில்லை மற்ற குலத்தவர்களை  குறைகூறிவாழும் முட்டாளாக வெறியனாக எப்பொழுதும் இருந்ததில்லை.

 நான் வள்ளுவன் வள்ளுவத்தை எடுத்துக்கொண்டேன் நான் ஒரு சாதி இளைஞர்களின் தலைவன் அல்ல அறிவுசார் கூட்டத்தின் சான்றோர்களின் பிரதிநிதி...

வள்ளுவம் வளர்த்த சான்றோர்களின் வழித்தோன்றல் நான்
ஆதலால் நானும் வளர்க்கின்றேன் எனது மதத்தினை வள்ளுவத்தினை
வள்ளுவனாக... ஒரு முற்போக்குவாதியாக

ஓழுக்கம் எங்கள் குருதியில் கலந்தது நன்நெறி
எங்கள் முப்பாட்டன் தந்தது

"வள்ளுவ மதம்" மதம் என்பது இறைவனை (அ) வாழ்வியலை முறையாக அடைவதற்கான வழி "வள்ளுவம்" என்பது என் மதம் திருக்குறள் எனது மதத்திற்கான வழிகாட்டும் புத்தகம்


வள்ளுவத்தைபோற்றுங்கள்
வள்ளுவத்தை வாழ்த்துங்கள்
வள்ளுவத்தை சொல்லிக்கொண்டேயிருங்கள்
வள்ளுவம் ஒரு மந்திரச்சொல்
வள்ளுவனை போற்றாத நாடும் வீடும்
வளம்பெறமுடியாது
வள்ளுவம் வள்ளுவன் மந்திரச்சொல்
வாழ்வை வளம்பெறசெய்யும் 
சக்தியுடையது வாழ்க வள்ளுவம்
வளர்க வள்ளுவன்

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், 
உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை அறக்கட்டளை  
+91 9994724447, 7373290884, 9944007979
www.valluvankulam.org




Monday 5 August 2013



சாணக்கியர் என்பவர் யார் ? (பாகம் -1)
==============================

சாணக்கியர் இது சரித்திரம் போற்றும் பெயராக நம்பப்படுகிறது
உலக ராஜதந்திரிகள் வரிசையில் முதலிடம் இவருக்கு இவருடைய காலகட்டமாக கூறப்படுவது கி.மு.321-296 ஆகும் அதாவது 

     கி.மு. நான்காம் நூற்றாண்டு காலத்துடன் சேர்ப்பதைக் காலக் குளறுபடியாகக் காட்டி, அர்த்தசாஸ்திரத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு காலத்திற்குப் பொருத்தக் கூறுகின்றன. தாமஸ் ஆர். டிரவுட்மேன் மற்றும் ஐ.டபிள்யூ மாபெட் ஆகியோர் அர்த்தசாஸ்திரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இயற்றப்பட்டது கிடையாது எனும் கருத்தில் ஒன்றுபடுகின்றனர்.
 
     இச் சாஸ்திரமானது தவறான ஆட்சியின் அருளின்மையை பொறுக்காது விரைவாக நூலையும், போர்த் தந்திரங்களின் அறிவியலையும், நந்த அரசர்களிடம் போய்ச் சேர்ந்த பூமியையும் மீட்டெடுத்தவரால் ஆக்கப்பட்டது," என்கிறது. மிகச் சமீபத்தில், மிட்டல்  என்பவர் டிரவுட்மேன் கையாண்ட வழிமுறைகள் அவரது கூற்றுக்களை நிரூபிக்க போதுமானதாக இருக்கவில்லை என்றார். ஆகையால், " அர்த்தசாஸ்திரத்தின் ஒரே ஆசிரியர் கௌடில்யரே என்பதற்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் ஏதுமில்லை; மேலும் அது கி.மு. நான்காம் நூற்றாண்டின் போது எழுதப்படவில்லை என்பதற்கும் ஆதாரமில்லை" என்றார்.
(எது உண்மை.........?)
 

வாழ்கை நெரியை போதிப்பதில் அன்றைய மகாபாரதத்தை ஒப்பிடக்கூடிய அர்த்தசாஸ்த்திரம் இன்றைய அரசியல் சட்டத்துடன் ஒப்பிடலாம்.

ஏடுத்தகாரியத்தை முடிக்க வேண்டும்,இலக்கை அடையவேண்டும் சாணக்கியரை பொருத்தவரை இதுவே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று
அவர் ஒரு தந்திரவாதி, பலதிட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி
இதை செயல்படுத்தும் இரும்புமனிதன்

வாழ்கையின் அர்த்தமே செல்வங்கள்களைத்தேடிக்கொள்வதில்தான் இருக்கிறது. எல்லாக்காரியத்துக்கும் பணம் வேண்டும் ஆதலால் கஜானாவில் கவனம்வையுங்கள். இது சாணக்கியர் எனும் கௌடில்யரின்
கருத்து

சாணக்கிய்ர் தர்மத்தைவிட சட்டம் பெரியது என உறுதிபட கூறினார்
மதகுருவைவிட மன்னனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்

இந்தியர்கள் ஊழ்வினைகொள்கைகளின் மீதுள்ள நம்பிகையில் எல்லாம் விதிப்படி நடக்கும் என்று சோம்பிக்கிடந்தனர்,

அந்நிலையில்தான் அலெக்சாண்டர் போன்ற மாவீரர்கள் இந்தியாவை
தன்வசப்படுத்திகொண்டால் என்ன என்ற எண்ணம் எழுந்தது அதன்படிதான் இந்தியாவின் மீது அன்னிய படையெடுப்புகள் சாணக்கியரின் கண்முன்பாக காந்தாரம் பொன்ற அரசுகள் வீழ்ச்சிகண்டது

அலெக்சாண்டரை எதிர்க்க ஆயுதங்கள் போதாது இந்திய மனங்களில் ஒரு புதிய எழுச்சித்தேவை என்பதை உணர்ந்தார்

ஆரிய வம்சமான சாணக்கியர் என்ற கௌடில்யர் ஆர்யவர்த்தத்தை கைப்பற்றும் ஆசை ஒரு 100 வருடத்திற்க்கு எவருக்குமே வராதபடி அவரது இராஜதந்திரங்கள் இருந்தன அவர் அரசனை உருவாக்கவில்லை ஒரு அரசு நிர்வாகத்தையே ஒருகலையாக உருவாக்கினார்......

அரசன்,அமைச்சர்கள், அதிகாரிகள் இவர்களின் கடமைகளை அர்த்தசாஸ்திரத்தில் அழகாக சொல்லியிருக்கிறார்.

..........புரிகிறது உங்களின் கேள்வி ஒரு ஆரிய அரசியல் தந்திரவாதியினைப் பற்றி ஒரு வள்ளுவன் என்ன சொல்லபோகிறேன் என்று........

இனிதான் இந்தக்கட்டுரையின் கரு தொடங்குகிறது....

இப்படிபட்ட ஆரிய இராஜதந்திரியின் கருத்தியல் எங்கிருந்து கற்றுகொள்ளப்பட்டது

எம் வள்ளுவனின் அறிவார்ந்த சமுதாயத்தின் வழித்தோன்றல் அய்யன் திரு வள்ளுவனின் உலகப்பொதுமறை எனப்படும் எமது வள்ளுவ மதத்தின் திருக்கவசம் திருக்குறளில் இருந்து கற்றுகொள்ளப்பட்டது
இதற்கான ஆதாரங்கள் இதோ....உங்களுஙககாக

தந்திரங்கள் இனி தொடரும்....

உங்கள் சொந்தக்காரன்
வெ.ஜெ. ஹரிஹரசுதன்

Friday 2 August 2013

அனைவரும் அர்ச்சகர் ஆகலாமா ? தமிழினத்தின் வரலாறு
=============================================

தமிழர் அரசாண்ட காலம் வரையில், சேரி என்பது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான குடியிருப்பு அல்ல . அதே போல், சேரி என்றாலே அது ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுக்கப்பட்ட பகுதியும் அல்ல .

‘தஞ்சை பெருவுடையார் கோயிலின் வடமேற்கு வெளிச்சுவரை அடுத்த பகுதிதான் தளிச்சேரி அமைந்த இடம்.’

(தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் – 42)

இது நகரின் நடுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சேரி என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைத்தான் குறிக்கும் என்பதும் ஒரு கட்டுக்கதையே. சேரி எனும் சொல், ’புறத்தே’ உள்ள குடியிருப்பு அல்லது ஊர் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. சேர்ந்து வாழும் பகுதியின் பெயர் சேரி அவ்வளவே.

தளிச்சேரி –பெருவுடையார் கோயிலின் புறத்தே இருந்ததால், இப்பெயர் வந்திருக்கலாம். இராசராசச் சோழர் காலத்தில், கோயிலைச் சுற்றி அக்கிரகாரங்கள் மட்டுமே இருந்தன என்ற கட்டுக்கதையையும் இங்கே நினைவு கூறத்தக்கது.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும் ஊரில், பார்ப்பனரும், பாணரும் பண்டாரங்கள் உள்ளனர்.(புறஞ்சேரி இறுத்த காதை)

இவ்வூரைச் சிலப்பதிகாரம்,

’புரிநூல் மார்பர் உறைபதி’

-அதாவது மார்பில் நூல் அணிந்தவர் வாழும் ஊர் என்று குறிக்கிறது.
பறைச்சேரி, என்றால் பறையர் வாழும் ஊர் என்பதுதான் பொருள்.

இதேபோல், பார்ப்பனச் சேரிகளும் தமிழர் வரலாற்று ஆவணங்களில் ஏராளமாக உண்டு.

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும்.இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.

(உடையார்குடிக் கல்வெட்டு – ஒரு மீள்பார்வை/முனைவர்.குடவாயில் பாலசுப்ரமணியன்)

கடலு◌ார் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம் உடையார்குடி எனது ஊர். எனது வீட்டின் அருகில்தான் அமரர்கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று காவியதில் வரும் குளக்கரை அதனருகில் அரசமரம்...எதிரே பழமைவாய்ந்த சிவாலயம் வீரநாராயண ஏரி (வீராணம் ஏரி) தென்புரத்தில் உள்ள ஊர் இங்குதான்

ஆதித்த கரிகாலன் கொலையுன்டதன் வரலாற்று கல்வெட்டுகள் உள்ளன
எனனாது குறிப்பிடதக்கது

நாகை அருகே, பார்ப்பனச் சேரி என்ற ஊர் இன்றும் உள்ளது.
குறிப்பிட்ட சேரிகளில் குறிப்பிட்ட பிரிவினர் தனித்துதான் வாழ்ந்தனர் என்பதும் இல்லை. சேரி என்றால், அதில் பார்ப்பனரும் வாழ்வர், பாணரும் வாழ்வர் என்பதை நிறுவவே சிலப்பதிகார மேற்கோள் காட்டப்பட்டது.

இன்றோ, தமிழகத்தில் சேரிகள் என்பவை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடத்தை மட்டுமே குறிக்கின்றன. இந்த நிலை, உருவானது, விஜயநகர, நாயக்க, மராட்டிய அரசர்கள் காலத்தில்தான்.

இதைக் கொண்டு, தமிழ் இலக்கியங்களில் சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் எல்லாமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள் எனவும், அவ்விடங்கள் ஊரை விட்டு வெளியே இருந்தன எனவும் சேரிகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தீண்டத்தகாதவராக இருந்தனர் என்றும் கற்பனைக் கோட்டைகள் கட்டப்பட்டு வருகின்றன. உண்மையில், இந்த நிலைமைகள் எல்லாம் இன்றுதான் உள்ளன. தமிழர் அரசாண்ட காலம்வரை சேரி என்பது இருப்பிடத்திற்கான குறிச்சொற்களில் ஒன்று. அவ்வளவே.

இதுபோன்ற பொய்களைப் பரப்பியதில், திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த நூற்றாண்டில் பெருவெற்றி பெற்றனர் என்பது தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் உண்மை. தலித்தியம் பேசும் சிலரும் இந்தக் கட்டுக் கதைகளை நம்பி, தமிழர் வரலாற்றையே சாதிய வரலாறாக அணுகத் துவங்கிவிட்டனர். இன்றளவும் இது அரசியலாகத்தான் பார்கப்படுகிறது ஓட்டுவாங்கிகளின் ஓட்டு வங்கிகளாகத்தான் சேரிகள் இருந்துவருகின்றன...

எவன் ஒருவன் தன்நிலைப்பற்றிச்சிந்திக்கத்தொடங்கிவிட்டானோ அவன் அறிவின் பாதையில் பயணப்படுகின்றான் என்று அர்த்தம் அந்த பயணம் ஒரு விடுதலைக்கான தொடக்கம் இன்றுவரை தமிழ்நாட்டில் அதற்கான
முயற்சி எங்குமே தென்படவில்லை காரணம் அரசியல்.

’நகரப் பெருந்தெருக்களில் உயர்குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். சாதியால் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கே இடமில்லை’ என்பதும் பரவலாக வீசப்படும் குற்றசாட்டு.

தஞ்சையின் பெரும் தெருக்களில் ஒன்றான சூரசிகாமணிப் பெருந்தெருவில் வாழ்ந்தோரது பட்டியல் இது;

• கணித நூலோர் வள்ளுவர்கள் (சோதிடர்)
• குயவர்கள்
• வண்ணத்தார்
• ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்போர்)
• நாவிதர்கள் (முடி திருத்துவோர்)

(தஞ்சாவூர் –முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் -51)

நிலக் காணிக்கொடை வழங்கும் சோழர் கால வழக்கம், பிராமணருக்கு மட்டுமே உரியதாக இருக்கவில்லை. கோயில் தொடர்பான பணிகள் செய்த பல்வேறு தொழில் குலத்தவருக்கும் நிலக் காணி வழங்கப்பட்டது.
பெருவுடையார் கோயில் நிர்வாகத்திற்காக, அக்கோயிலில் பணி செய்தவர்களின் பட்டியலைப் பல்வேறு கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. அப்பணியாளர் அனைவருக்கும் எவ்வளவு நிலக் காணி வழங்கப்பட்டது என்ற பதிவும் அவற்றில் அடங்கும்.

அக்கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.

நட்டுவம் செய்யும் ஆசார்யார்கள் – 12
கானம் பாடுவோர் -5
ஆரியம் பாடுவோர் – 3
தமிழ் பாடுவோர் -4
கொட்டி மத்தளம் இசைப்போர் – 2
முத்திரைச் சங்கு ஊதுவோர் -3
கணித நூலோர் (சோதிடர்) -2
விளக்குப் பணியாளர் – 7
நீர் தெளிப்பவர் – 4
குயவர்கள் – 10
துணி வெளுப்பவர் – 2
நாவிதர் – 6
துணி தைப்பவர் – 2
கன்னார் – 1
தச்சர் – 5
சாக்கைக் கூத்தர் -4
-உள்ளிட்ட மொத்தம் 258 பேர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் அவரவரது பணிக்கேற்ப, ஒன்றரை முதல் 2 காணி நிலம் வரை வழங்கப்பட்டது.

((இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன்/ சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை 2010/ பக் – 429)

இராசராசச் சோழர் காலத்தில், பிராமணருக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன என பொத்தாம் பொதுவாக, எந்த முறையான சான்றுகளும் இல்லாமல், பரப்புரை செய்வோர், மேற்கண்ட கல்வெட்டுகளைக் கண்டுகொள்வதே இல்லை.

உணவு உற்பத்தியை, உற்பத்திப் பிரிவினருக்கும் – உற்பத்தி சாராத பிரிவினருக்கும் இடையே பகிர்ந்தளிக்கும் முறையின் நிலவுடைமை வடிவமே நிலக்காணி / நிலக் காணியில் பங்கு வழங்கும் முறை ஆகும். இந்தப் பகிர்ந்தளிப்பின்போது உருவாகும் உபரி மதிப்பை, அரசர், அதிகாரிகள், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு பிரிவினரும் தமக்குள் பிரித்துகொண்டனர்.

கோயில்களில் பிராமணரல்லாதோர்:
============================

கோயில்களில் பிராமணர் மட்டும்தான் கோலோச்சினர். அல்லது, கோயில்களில் பூசை செய்தோர் அனைவருமே பிராமணர்கள்தான் என்ற பரப்புரையின் உண்மைப் பக்கங்களைக் காண்போம்.

’தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தலைமை சிவாச்சாரியாரக இருந்தவர் பவனபிடாரன் என்பவராவர்.’(மேலது நூல் / பக் – 440)

இவர் ஆரியருமல்லர்; பிராமணரும் அல்லர். தமிழாய்ந்த தமிழரே! தேவாரம் பாடுவோர் பிடாரர் எனப்பட்டனர். பவனபிடாரர், தேவாரம் பாடுபவர்; இவரே கோயிலின் தலைமைக் குரு. பிராமணர்கள் இவருக்கு அடுத்த நிலையில்தான் வைக்கப்பட்டனர். பிராமணர்கள், அரசனிடமிருந்து காணிப் பங்கு எதிர்பார்த்து வாழ்ந்த நிலையில்,

‘பவன பிடாரன் பெருவுடையார் கோயிலுக்கு பொன் போர்த்திய செப்புக் குடத்தை அறக்கொடையாக வழங்கினார்’ (மேலது நூல்/ பக் – 440)
பிராமணரைக் கொலை செய்வது பாவம் என்பது ஆரிய பிராமணியத்தின் கோட்பாடுகளில் ஒன்று. பிரமஹத்தி தோக்ஷம் என்று இதற்குப் பெயர்.
‘மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்ட இராஜராஜன் அந்நாட்டு பிராமணர்களைக் கொன்றான் என்பதைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் காட்டுகின்றன’

(உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள் பார்வை –குடவாயில் பாலசுப்ரமணியன்)

இவை ஒருபுறமிருக்க, கோயில்களில் பூசை செய்யும் பிரிவினர் குறித்த சில விளக்கங்களைக் காண்போம். தமிழர் வரலாற்றில் பார்ப்பார்கள் என்னும் பிரிவினரில் தமிழரும் உண்டு; அந்தப் பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவ குலத்தின் அறிவார்ந்த பிரிவினர் ஆவர்.
வள்ளுவர்களிடம் மார்பில் குறுக்காக நூல் அணியும் வழக்கம் இருந்தது
இத்தகைய பெருமைமிகு வள்ளுவ கணினியர்களை ஆரிய வரவுகளே புரம்தள்ளிற்று என்பதற்க்கு பல ஆதாரபூர்வமான கல்வெட்டுகள் இன்றளவும் இருக்கின்றன என்பதே உண்மை

ஆரியப் பிராமணர் (வள்ளுவர்களுடன்)தமிழருடன் இணைந்து பிழைக்கத் தொடங்கிய பிறகு பார்ப்பார் எனும் பெயரைத் தமக்கானதாகவும் மாற்றிக் கொண்டனர்.

மார்பில் குறுக்காக நூல் அணியும் வழக்கம் தமிழர்களின் அறிவுசார் குலத்தவரிடன் தொன்மையான வழக்கமாகும். சூத்திரர், எனும் சமக்கிருதச் சொல்லுக்கான பொருளே, ‘நூல் அணிந்தவர்’ என்பதுதான்.
இதற்கான சான்று கீழே தரப்பட்டுள்ளது.

sutra (p. 351) [ s&usharp;-tra ] n. [&root;sîv] V., C.: thread, string, cord (ord. mg.); C.: sacred cord (worn over the left shoulder by the three upper castes);
(http://dsal.uchicago.edu/dictionaries/macdonell/)

ஆகவே, பூணூல் அணிந்தோரெல்லாம், ஆரிய பிராமணர் அல்லர். பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தான உடமையும் அல்ல

அனைவரும் அர்ச்கராகலாம் சரி..

ஆதியில் தமிழ்குடியின் தொன்மையன அர்ச்சகர் வள்ளுவன் தானே...அவனைவிட வைதீகத்தினையும் ஆன்மீகத்தினையும் சோதிடத்தையும் உபநிடதங்களையும்உண்மையாக அறிந்தவன் யார்
வள்ளுவனுக்கான உரிமை அது அவனே தமிழ் ஆலயங்களின் அர்ச்சகர்

தமிழனென்று சொல்லிகொள்ளும் அனைவருக்கும் ஒரு செய்தி வள்ளுவனை முன்னிருத்துங்கள் வள்ளுவனை போற்றுங்கள் தமிழினம்
தானாக வளரும் வளம்பெறும்

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வள்ளுவ வரலாற்று ஆய்வு நடுவனுக்கான ஆராய்ச்சியில்
கிடைக்கும் தகவல்கள் உங்களது கவனத்திற்கு

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உவக வள்ளுவ குல இளைஞர் பேரவை,

ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சியாளர்
வள்ளுவ குல வரலாற்று ஆய்வு நடுவன்.

Thursday 1 August 2013

சாதிவெறி எங்களுக்கு இல்லை தமிழனின் வரலாற்றைச்சொல்ல வேறு வழியும் இல்லை ஆதலால் கூறுகிறோம் உலகத்தின் தொன்மையான தமிழன் வள்ளுவனென்று








திருவள்ளுவரின் பூர்வீகம் குமரிதான் என்பதற்கு ஆதாரம் உங்களுக்காக
=======================================================
"வள்ளுவர் கன்னியாகுமரி மண்ணின் மைந்தன்!" 

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கடலில் கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கே தவிர்க்க முடியாத அடையாளம்! 'தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அழகான கடற்கரைகளும் எழில் கொஞ்சும் பாறைகளும் இருக்கும்போது, எதற்காகக் கன்னியாகுமரியில் அவருக்குச் சிலைவைத்தார்கள்?’ வரலாற்றுப் பின்னணியோடு அதற்கான காரணங்களைச் சொல்கிறார் 

நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், டாக்டர் பத்மநாபன். இவர், குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

''தொல்காப்பியத்தில் 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’னு தமிழகத்தின் எல்லை பரப்பு சொல்லப்பட்டு இருக்கு. தொல்காப்பியத்தில் சொல்லப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்னு நான்கு வகை நிலங்களும் குமரி மாவட்டத்தில் இருக்குது. அதனால்தான் வள்ளுவர் திருக்குறளில் இந்த நான்கு நிலங்களுக்குமான பிரதான தொழில்களைப் பற்றியும், அதன் நுணுக்கங்களையும் அத்தனை சிறப்பா சொல்லி இருக்காரு.

அன்றைய காலங்களில் குமரி மாவட்டத்தில் குறிஞ்சி நிலத்தில் குறவர்களும், முல்லை நிலத்தில் வேட்டுவர்களும், மருத நிலத்தில் உழவர்களும், நெய்தல் நிலத்தில் மீனவர்களும் வாழ்ந்துஇருக்காங்க. திருவள்ளுவர் பிறந்த ஊரான (இப்போது மறுவி திருநயினார்குறிச்சி) திருநாயனார்குறிச்சியின் பக்கத்தில்தான் முட்டம் கடல் பகுதி இருக்கு. அதாவது முழுக்க முழுக்க நெய்தல் பூமி. அதன் எதிர்ப் பக்கத்தில் பெரிய குளம். நீர்ப் பாசனம் நிறைந்த பகுதி என்பதால் வெள்ளாமை செழிப்பாக நடைபெற்ற பூமி. அதாவது மருத நிலம். திருவள்ளுவர் நெய்தலும் மருதமும் இணையும் திருநாயனார்குறிச்சியில் பிறந்ததால்தான் இங்கு உள்ள தொழில்களை ரொம்பவும் மதிநுட்பத்துடன் குறள் வெண்பாக்களில் சொல்லி இருக்கார்.

திருநாயனார்குறிச்சியின் பக்கத்தில் கூவைமலைனு ஒரு மலை இருக்கு. பேச்சிப் பாறையை ஒட்டி உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் காணி என்னும் பழங்குடி மக்கள், வள்ளுவரை இன்னைக்கும் தெய்வமாக வணங்குறாங்க. பருவ மழை பொய்த்துவிட்டால் கூவைகாடு பகுதியில் வள்ளுவர் பெயரால் அமைந்து உள்ள வள்ளுவன் கல்பொற்றை மலைக்குப் போய், வள்ளுவருக்குப் படையல்வைத்து வணங்குவாங்க. இதுக்கு 'வள்ளுவன் கொடுதி’னு பேரு.

முன்னாடி குமரி மாவட்டம் 'வள்ளுவன் நாடு’, 'நாஞ்சில் நாடு’னு இரண்டு பகுதியா இருந்துச்சு. அதில் நாஞ்சில் நாட்டைப் பொருநன் என்ற வள்ளுவன் இனத்தைச் சேர்ந்த மன்னன் ஆட்சி செஞ்சிருக்காரு. வள்ளுவ நாட்டை, திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரே ஆட்சி செஞ்சாருனு சொல்லப்படுவது உண்டு. திருவள்ளுவர் அரசனாக இருந்து, பிற்பாடு துறவியாக மாறி இருக்கார். அதனால்தான் அரசியலைப் பற்றி எழுதும்போது வள்ளுவரால் மன்னருக்கே உரிய நுட்பமான திறன்களை அத்தனை அழகா சொல்ல முடிஞ்சிருக்கு. ஆனால், இடைக்காலத்தில் வள்ளுவர் நெய்தல் தொழில் செய்ததாகப் பதிவுசெய்துவிட்டார்கள். ஆனால், அவர் நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என்பது மட்டும்தான் உண்மை.

குமரி மாவட்டத்தில் உள்ள சராசரி பழக்கவழக்கங்கள், திருக்குறளில் அதிகமாக இடம்பெற்று உள்ளன. நாஞ்சில் நாட்டுக்கே உரிய உழவியல் செயல்முறையான பொடி விதைப்பு முறை திருக்குறளில் வருது. 'தொடிப் புழுதி’ எனத் தொடங்கும் குறளில் உள்ள பொருளைப் பார்த்தால், 'ஒரு பிடி மண் கால்பிடி ஆகும்படி உழவு காயவிட்டால், ஒரு பிடி உரம் கூட இல்லாமலேயே, பயிர் செழித்து வளரும்’ என்று பொருள்படும். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் இந்தக் காய்ந்த மண்ணைப் 'புழுதி’ என்றே இன்றும் அழைக்கிறார்கள்.

வள்ளுவர் பல இடங்களில் 'உணக்கின்’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்காரு. 'உணக்கின்’ என்ற சொல்லுக்கு காயவைத்தல்னு பொருள். இந்தச் சொல் இன்னைக்கும் குமரி மாவட்டப் பேச்சு வழக்கில் இருக்குது. அதே போல் இங்கு உள்ள முட்டம் பகுதியில் உள்ள மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதனை வள்ளுவர் 'தூண்டிற் பொன்’ என்ற குறளில் குறிப்பிட்டு இருக்கார். இந்த மீன் பிடி முறை தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.

இது போன்ற தகவல்களைத் தொகுத்து 1995-ல் அரசு ஆவணங்களில் திருவள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்ததாகப் பதிவு செஞ்சாங்க. இன்னைக்கும் 'திருவள்ளுவர் மதுரையில் பிறந்தார்’, 'மயிலாப்பூரில் பிறந்தார்’னு சொல்றாங்க. அவங்களால இந்த அளவுக்கு ஆதாரங்களைக் கொடுக்க முடியலை. வள்ளுவனுக்குச் சிலைவைக்க முடிவு செஞ்சதும் கன்னியாகுமரியைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணமும் இது தான்!' என்றார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், டாக்டர் பத்மநாபன். இவர், குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வள்ளுவ வரலாற்று ஆய்வு நடுவனுக்கான ஆராய்ச்சியில்
கிடைக்கும் தகவல்கள் உங்களது கவனத்திற்கு 


01.08.2013. 

வெ.ஜெ.ஹரிஹரசுதன்,

தலைவர், உவக வள்ளுவ குல இளைஞர் பேரவை,

ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சியாளர்

வள்ளுவ குல வரலாற்று ஆய்வு நடுவன்.




வள்ளுவத்தை வள்ளுவம்பேசுகிறது.. பதிவு (01.08.2013)
===========================================
என் அறிவார்ந்த சமுதாயமே...
வணக்கம்,

இன்று வள்ளுவம் பேசுவது...
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: புலவி நுணுக்கம்.

உங்கள் எண்ணம் புரிகிறது உண்மைதான் பெண்மையை போற்றிய பெருமைமிகு தெய்வப்புலவன் வள்ளுவன்

தமிழ் பெண்களின் கற்பு பற்றிய புலவியல் என்னதான் பெண்கள் இன்றைய கலாச்சார புதுமையில் புகுந்துகொண்டாளும் தமிழ்பெண்களின் பண்பாடு இன்றளவும் குறையவில்லை என்றுதான்
சொல்ல வேண்டும்

ஏன் எனில் இங்குதான் காதல் இன்னும் உடலளவு என்று இல்லாமல்
மனதளவு உணர்வுபூர்வமான ஒன்றாக கருதுகிறார்கள்

என்ன அழகாக அய்யன் சொல்கிறார்

குறள் 1311:

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

மு.க.உரை:
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

மு.வ உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

Translation:
From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace.

Explanation:
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

கற்பு என்பது பெண்களுக்கும் மட்டுமில்லை அது ஆண்களுக்கும் பொதுவானது என்ற பகுத்தறிவுபுலவன் வள்ளுவனேயன்றி வேறுயாரும் இலர்

என்னதான் தான் நேசிக்கின்ற ஆண்மகனாக நீ இருந்தாளும் கம்பீரமான தோள்களையும் தினவெடுத்த மார்பகங்களை பெற்றிருந்தாலும் போர்க்களதில் வீரம் செறிந்த செயல்களினால் உனது மார்பு விரிந்து படந்து இருந்தாலும் நீ வீதி வழி நடகையிலே

நான் மட்டுமின்றி ஏனைய பெண்டீரும் பார்த்து காமத்தினால் ஏற்படும் மோகத்தினால் தனை மறந்து இவன் எனக்குறியவன் (தன்னைசொல்கிறாள்) என்ற என்னமற்று பார்ப்பதனால்

எனது காதலனே இனி எவ்வாறு உனது அந்த வீரம் செரிந்தமார்பினை நான் தழுவுவது என்று தன் காதலனை கோபம் கொள்கிறாள்

இன்றளவும் நம் பெண்கள் தன் கனவனை இன்னொரு பெண்ணிற்க்கு கனவிலும் கூட விட்டுதரமாட்டாள் என்பது தானே உண்மை

என்ன அழகான வரி இதுவரையில் பெண்களை மட்டுமே...அழகு பதுமையாக போகப்பொருளாக வர்னிக்கும் புலவர்களை பார்த்திருப்போம் இப்படி ஒரு ஆண்மகனை தன் காதலனின் அழகை ஒரு பெண்இரசிப்பதை இதைவிட அழகாக யாரும் சொன்னதில்லை

வள்ளுவம் வாழ்வியலை காதலை உணர்வுபூர்வமாக தமிழுகே உரியதன்மையில் மிக அற்புதமாக சொல்லியிருக்கிறது...

தினமும் திருக்குறள் படியுங்கள் வாழ்வியலின் உன்னதம் உணருங்கள்
வள்ளுவனாக வாழுங்கள் வள்ளுவத்தைப் போற்றுங்கள்

வாழ்க வள்ளுவம் வளர்க எம் குலம்

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவர் குல பேரவை
9994724447 7373290884 9944007979

Wednesday 31 July 2013

வள்ளுவம் கடந்துவந்த பாதை (வரலாறு)

வள்ளுவம் கடந்துவந்த பாதை (வரலாறு)
================================

கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற ஜைன நூலான சீவகசிந்தாமணி (பா. 1234) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து ஈனராய்ப் பிறந்தது.

அதாவது, எயினர் (மறவர்) போன்ற இழிந்த குலத்தில் ஒருவன் பிறப்பது அவன் முற்பிறப்பில் உயிர்களைக் கொன்ற பாவத்தினால்தான் என்பது இதன் பொருளாகும். பிற உயிர்களைக் கொண்று தின்னுதல் மிக இழிவான பழக்கமாகக் கருதப்பட்டதால் அத்தகைய கொலைத் தொழிலையே தங்கள் வாழ்வியலாகக் கொண்டிருந்த மறவர், குறவர் போன்ற இனத்தவர்கள் பெளத்த, ஜைனர்களால் இழிகுலத்தவராகக் கருதப்பட்டனர். சீவகசிந்தாமணி வேறோரிடத்தில் (பா. 2741) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

வில்லின் மாக் கொன்று வெண்ணிணத் தடி விளிம்படுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.


பரதவர் முதலிய மீனவர் சமூகத்தவரும் இழிகுலத்தவராகக் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

வைதிக இந்து சமயத்தின் மிக உயர்ந்த வர்ணத்தவராகக் கருதப்பட்ட பிராம்மணர்கள் புலால் உணவை விட்டொழித்தவர்கள் அல்லர். ஜைன, பெளத்த சமயத் தாக்கத்தினால்தான் புலால் உண்ணும் வழக்கத்தை மாற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. எனவே, உபநிடதங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வைதிக சமயம், கொலைத் தொழில், புலால் உண்ணுதல் போன்ற பழக்கங்களின் அடிப்படையில் சாதிய உயர்வு தாழ்வினைக் கற்பித்தது என்பது தர்க்கபூர்வமான ஒன்றல்ல. ஜைன, பெளத்த சமயங்களின் தாக்கத்தால் மட்டுமே வைதிக இந்து சமயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உட்புகுந்து நிலை பெற்றிருக்க வேண்டும். பெளத்த சமயம், பிராம்மண வர்ணத்தவரின் ஆதிக்கத்துக்கு எதிரானது என்ற கருத்து சரியானதே. ஆனால், க்ஷத்ரிய, பிராம்மண, வைசிய, சூத்ரர் என்ற சமூகப் படிநிலையையே பெளத்தம் முன்னிறுத்தியது என்பதையும்,

“வள்ளுவ பார்ப்பனர்" வள்ளுவர் குலத்தாரையும், 

“வேளாப் பார்ப்பனர்" எனப்பட்ட விஸ்வ பிராம்மணர் (கண்மாளர்)களையும், அருந்தவர்களையும் (தபஸ்விகள்) பிராம்மணர்களுக்கு மாற்றாக ஏற்றிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுகளில் உருவான சைவ, வைணவ பக்தி இயக்கம் சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்த முயன்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று முழங்கிய அப்பர் பெருமானும், "குலந்தாங்கு சாதிகள் நாலினும் கீழ்ப்பட்டு எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளராயினும் திருமாலுக்கு அடியாராயினால் உயர்வடைவர்" என்ற ஆழ்வார் பாடலும் பிரச்சார நோக்கத்தில் வீசப்படும் மாயத் தூண்டில்கள் என்றே கொண்டாலும்கூட தர்க்கபூர்வமான பெளத்த ஜைனர்களின் ஊழ்வினைக் கோட்பாட்டுக்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட சரணாகதியினால் உயர்வடைதல் என்ற அடையாளமே என்பது ஐயத்துக்கு இடமற்ற உண்மையாகும். இவற்றால் என்ன பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால், வைதிக இந்து சமயம்தான் சாதியமைப்பை உருவாக்கிக் கட்டிக்காத்தது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே இம்மேற்கோள்களை எடுத்துக்காட்ட நேர்ந்தது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், "ஐயா, நாங்கள் தாழ்ந்த மறக்குலத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தம்மிடம் அறிமுகம் செய்துகொண்ட பொன்னனையும், பொன்னாச்சியையும் தம் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஆதர்சமான வைணவர்களாக முன்னிறுத்திக் காட்டினார். பொன்னனுக்குப் ‘பிள்ளை உறங்காவில்லி தாசன்’ என்ற தாஸ்ய நாமம் வழங்கியதோடு, அவனது தோளில் தமது கையைப் போட்டுக்கொண்டு நடப்பது குறித்து உயர்குல அடியார்கள் கேள்வி எழுப்பியபோது "உத்தமமான அந்த வைணவனைத் தொடுவது ஒரு ஸ்பரிசவேதி (தொட்டால் தங்கமாக்கும் ரசவாதம்)" என்றும் கூறியவர் ராமானுஜர். அதுமட்டுமின்றி பிள்ளை உறங்காவில்லி தாசன், அகளங்கநாடன் எனப்பட்ட விக்கிரம சோழனின் மெய்க்காவலனாகப் பணிபுரிவதன் மூலம் கிடைத்த ஊதியத்தைக் குருதட்சிணையாகக் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்து, உயர்குடிப் பாரம்பரியப் பெருமித உணர்வுடைய அரசர்களால் ஈட்டப்பட்ட பொருள் பாப திரவியம் என்றும் குறிப்பிட்டவர் ராமானுஜர்.

இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகப் புலப்படும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அவற்றோடு சார்ந்த பொருளியல் நலன்கள் என்பவை நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஆட்சியமைப்புகளும் அதிகார வர்க்கமும் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகளின் விளைவுகளே; (வைதிக) இந்து சமயமும், ஜைன, பெளத்த சமயங்களும் அவ்விளைவுகளுக்குப் பின்னேற்பு (ratification) வழங்கிய குற்றத்தை மட்டுமே செய்தன என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பெளத்த சமயம் இன்றைய வஹாபிய இஸ்லாத்தின் ஜமாத் போல சங்கம் என்ற அமைப்பின் மூலம் ஆட்சியதிகார அரசியலை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை, அரசர்களுக்கே அது பெரும் சவாலாக இருந்ததால் கி.பி. 7-8ஆம் நூற்றாண்டளவிலேயே பெளத்தம் இந்தியாவை விட்டு விரட்டப்பட்டது.

வள்ளுவ குல வரலாற்று ஆய்வுக்கான தேடலில் கிடைத்த தகவல்கள்
உங்கள் பார்வைக்கு
வாழ்க வள்ளுவம்.

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை.

திருவள்ளுவர் வள்ளுவகுலத்தை சேர்ந்தவரா.....?

திருவள்ளுவர் வள்ளுவகுலத்தை சேர்ந்தவரா.....?


கேள்வி கேட்போருக்கு ஒரு விளக்கம் ஆதாரபூர்வமான 
விளக்கங்களை சொல்வதை விட தற்போதைய நடைமுறை விளக்கத்தை வைக்கின்றேன்...

மதிப்பிற்குறியவர்களை பெயர்சொல்லி அழைப்பது ஒரு மரியாதைகுறைவான செயல் என்பதும் முற்காலத்திலும் தற்காலத்திலும் உள்ள நம்பிக்கை

ஜி.கருப்பையா அவர்கள் தமிழக காங்கிரஸ்சின் முன்னனி தலைவர் மத்தியில் பிரதமராக யார் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும்அளவு மக்களின் செல்வாக்கைபெற்றிருந்த தலைவர் காமராசருக்கு பின் காங்கிரஸ்சின் நேர்மையான தலைவர் என்றால் அது மிகையாகாது
இத்தகு பெருமைமிகு தலைவர் அவர்கள்
ஜி.கருப்பையா அவர்கள் பலருக்கு இப்படி அவரின் பெயரை சொன்னால் புரிவதைவிட 

ஜி.கருப்பையா முப்பனார்
என்றால் உடன் நினைவிற்கு வருகிறது பலருக்கு முப்பனார் என்றால் தான் புரிகிறது முப்பனார் என்பது பெயரல்ல அவரின் குலம் மரியாதைநிமிர்த்தமாக மதிப்பிற்குறிய ஐயா முப்பனார் அவர்கள் என்றுதான் அழைக்கின்றோம் 

இப்படித்தான் அன்றும் வள்ளுவ நாயனாரை திருவள்ளுவர் என்று குலப்பெயரால் அழைக்கப்பட்டது 

ஒரு குலத்தில் பிறந்தவரை பிற குலத்தின் பெயரைவைத்து யாரும் அழைப்பதில்லை என்பது அறிவுள்ளவர்கள் அறிவார்கள் 
திருக்குறள் மட்டுமே உலகப்பொதுமறை 
திருவள்ளுவர் அல்ல 


அவர்என்றுமே வள்ளுவத்தின் வழித்தோன்றலே...

வாழ்க வள்ளுவம்.

காதல் என்றால் என்ன?


உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? 
அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் 

பெருமை படைத்து இவ்வுலகு 

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

காமத்துப்பாலின் ஒவ்வொரு குறலும் காதலை அணுவணுவாக உணர்ந்து எழுதப்பட்டது என்பதற்கு வள்ளுவன் வாசகியின் வாழ்கை ஒன்று போதுமே...

காதல் என்பது இருபாலருக்குண்டான இனக்கவர்ச்சியன்று அது வாழ்வியல். இரு உள்ளங்களின் சங்கமம் வாழ்தலில் மட்டுமே உணரக்கூடிய தத்துவம் எதிர்பார்ப்புகள் இல்லாத எந்த உறவுக்குமே அழிவென்பது இல்லை காதலின் வெளிப்பாடு அன்புமட்டுமே...
வள்ளுவம் எதை சொல்லாமல் விட்டுவிட்டது சொல்லுங்கள்...
மனிதன் எப்படிவாழவேண்டும் என்று எப்படிவாழக்கூடாது என்று அனைத்தையும் சொல்கிறது வள்ளுவத்தை பின்பற்றுங்கள் 

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், வாழ்கையை ஒரு விளையாட்டாக எண்ணுகின்றவர்கள் வள்ளுவத்தின் வழி வாழ்ந்துபாருங்கள் வாழ்கையை நேசிக்க கற்றுக்கொள்வீர்கள்

காதல் நேசிப்பதில் இல்லை வாழ்ந்துக்காட்டுவதில் இருக்கின்றது

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வள்ளுவத்தின் வழியில்
வெ.ஜெ.ஹரிஹரசுதன் வள்ளுவன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை.

வள்ளுவம் என்பது எனது மதம் திருக்குறள் அதன் வழிக்காட்டி

வள்ளுவத்தை வள்ளுவம்பேசுகிறது...
===============================
என் அறிவார்ந்த சமுதாயமே.....
வணக்கம்,

அன்பையும் அறிவையும் மட்டுமே பகிர்ந்து பழகிய வள்ளுவமே...
இன்றைய அவசரக்காலத்தில் பணத்தைமட்டுமே தேடி அலைகின்ற மனித கூட்டங்களோடு ஒன்றாக கலந்து ஓடிகொண்டுதான் இருக்கின்றோம்.

இப்படிபட்டக்காலத்திலும் கலாச்சாரம் பண்பாட்டைக் கட்டிக்காத்து
அதனை நம் சந்ததிகளுக்கு எடுத்துச்செல்ல முற்படுகின்றவன்தான்
உண்மையான அறிவுடையவன் அறிவார்ந்தக் குலத்தைச் சேர்ந்தவன்

என்னதான் அறிவுடையவனாக சுயமாக சிந்திக்கும் திறமை இருந்தாலும் அவன் எத்தகைய கூட்டத்தோடு, நண்பர்களோடு, இனத்தோடு சேர்கின்றானோ அவற்றின் தன்னைமயில் அவன் அங்கு மாறிப்போகின்றான்.

ஓரு அறிவில்லாத கூட்டத்தோடும் சமுதாய அக்கறையற்ற கூட்டத்தோடும் சேர்கின்றவன் தனது அறிவை இழப்பதோடு அல்லாமல் நல்லவர்களுக்கு உதவாது மக்கிப்போகின்றான் 

என்ன அழகாக எம் குலத்தோன்றல் திருவள்ளுவர் சொல்கின்றார்
இப்படிபட்டவர்களின் பண்பை

குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.


பொருள்:

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.


Translation:

Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.

Explanation:
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

இங்கு வள்ளுவனை வள்ளுவக் குலத்தவனை சொல்கின்றார் திருவள்ளுவர் என்ன சொல்கின்றார்...
ஒருவன் நல் வாக்கு உடையவனனாக சமுதாயத்திற்கு நல் வழிக்காட்டுபவனாக இருக்க. அவன் அறிவானவனாக தன்னை காட்டிக்கொண்டாலும் அவன் எத்தகைய குலத்தில் இனத்தில் கூடியிருக்கின்றானோ அதன் தன்னைமயில்தான் அவனது அறிவு வெளிப்படும் என்கிறார் 

வள்ளுவன் வாக்கில் சிறந்தவன்,வள்ளுவன் பழகுவதில் இனிமையானவன், வள்ளுவன் சமுதாயத்தை நல் வழிபடுத்துபவன், வள்ளுவன் நேசிக்த்தெறிந்தவன், வள்ளுவன் நேர்மையானவன்,

இப்படிபட்ட குணம் பண்பாடு கலாச்சாரம் வள்ளுவனுக்கு எப்படிவந்தது
வள்ளுவத்தில் தோன்றியதால் வள்ளுவ மதத்தை பின்பற்றுவதால்
வள்ளுவன் வள்ளுவனாக வாழ்வதால்.... 

இப்படிப்பட்ட எம் குலம் இந்தமண்ணில் உள்ளதால்தான் 
அன்றும் இன்றும் இனி என்றும் இந்த பூமி உயிர்வாழ்கிறது

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை

V.J.Hariharasuthan Valluvan