Saturday 7 December 2013

தென்னகக் கோயில்களில் வள்ளுவர்களின் பங்கு

தென்னகக் கோயில்களும் வள்ளுவர்களும்
=================================================
      


            உயரிய பண்பாட்டுக் கலாச்சாரத்தின் முன்னோடிகளாகத் திகழுகின்ற தமிழின மக்களின் ஆன்மீக உணர்வே இன்றளவும் போற்றத்தக்கதாக இருக்கின்றது. தென்னக கற்கோயில்கள் தமிழனின் உயர் கட்டிட தொழிற்நுட்பத்தின்  உச்சத்தை உலகிற்க்கு பரைச்சாற்றுகிறது இத்தகைய சிறப்பிற்க்கு வள்ளுவர்களும் பெரும்பங்காற்றினார்கள்.

வள்ளுவக் குலத்ததின் தொன்மையை பறைச்சாற்றும் பல இலக்கிய சான்றுகள்

1. “வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னற்குள்பாடு கருமந் தானவர்க்கொன்றும்” - திவாகரம்

2. “வள்ளுவர் முரசமுது ரரைக்கென வருளினானே” - சீவக சிந்தாமணி – 2149 

3. “வாய்ந்த வந்நிரை வள்ளுவன் சொனான்” - சீவக சிந்தாமணி – 419 



கல்வெட்டு:1

கேரளாவில் உள்ள பொன்னானி வட்டத்துச் சுகபுரம் என்னும் ஊரிலுள்ள கல்வெட்டொன்று பின்வருமாறு கூறுகிறது

“சொகிரத்துப் படையாகும்……. இராயசேகராயின
வள்ளுவரும் கூடிச்செய்த கச்சமாவது”
என்பதே அது.

“புக்காட்டூர் ஊர் சபையோரும், வள்ளுவர்களும், கோயில் அதிகாரிகளும் சேர்ந்து இறைவனுக்குத் திருப்பணிசெய்தனர்” என்பதே அது.

       சங்க இலக்கியங்களில் தமிழக்கோயில்களில் இறைத்தொண்டாற்றி ஆலய நிர்வாகத்தை வள்ளுவர்கள்தான் மேற்கொண்டனர் என்பதற்கான இலக்கியச்சான்றுகள் ஏராளமாக உள்ளன.

ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 

செந்தண்மை பூண்டொழுக லான். 
                                                                   – திருக்குறள்

       எல்லா உயிர்கள்மீதும் அருளுடையவராக நடந்துகொள்வதால், அந்தணர் என்று சொல்லப் பெறுபவர் பற்றினைவிட்ட துறவியர் ஆவர். அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர் என்பது குறளின் பொருள்



        வள்ளுவர்கள் அரச குருவாகவும், கல்விபோதிக்கும் ஆசிரியனாகவும் மக்களுக்கு கோள்நூலின் துணைக்கொண்டு நல்ல நாள், கரிநாள், சுப நிகழ்ச்சிக்கான ஓரைகள் போன்றவற்றை கணித்துக்கூறும் “கணியர்களாவும்”, வெள்ளிக்கோளின் (சுக்கிரன்) இயக்கமறிந்து இயற்கைச்சீற்றத்தினையும், மழைபற்றிய தகவல்களையும் மக்களுக்குத் தெறிவித்துவந்த “அறிவனாகவும்” இருந்துவந்தனர்.

தொல்காப்பியம் அறிவன் சமுகத்தை இரு பிரிவுகளாக கூறுகிறது

1. அறிவன்

2. கணியன்

       
 இந்த இரண்டு பிரிவினர்களை உள்ளடக்கியதுதான் வள்ளுவ குலம். ஆக அந்தணர் எனப்படும் அறிவோர் அறிவன், கணியன் என்கின்ற வள்ளுவக் குலத்தாரையே குறிக்கும்.

          இன்றைக்கு ஆசீவகத்தின் மூலத்தைக் கருவாகக்கொண்ட இந்துமதத்தின் மிகப்பெரும் பிரிவுகளாகிய சைவம் மற்றும் வைணவத்தினை வள்ளுவ குல மக்கள் பின்பற்றுகின்றனர் அவையே வள்ளுவத்தின் இரு கோத்திரங்களான நாயனார்கள் மற்றும் ஆழ்வார்கள்



            இன்றைக்கு மிகப்பெரிய சிவாலயமான தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம் தில்லை நடராசப்பெருமான் ஆலயத்தின் வழிபாட்டுமுறையானது சங்கம வழிபாடு 

அவதாரத் தலம் : தில்லை (சிதம்பரம்).
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : திருப்புல்லீச்சரம் (தில்லை - சிதம்பரத்தில் உள்ள ஒரு                                                                     தலம்).
குருபூசை நாள் : தை - விசாகம்.



சங்கம வழிபாடு என்பது என்ன?
=========================

           சைவ சமயத்தின் இரு வழிபாடாகிய குரு, சங்கம வழிபாடு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த வழிபாடாகும். சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று இறைவனுடைய திருவருளைக் குருவின் மூலமாகத்தான் பெற முடியும் என்பதாகும். குரு என்பவர் உயிர்களின் பாசங்களை நீக்குபவர் ஆவார்.


             குருவிடம் ஞான நூல்களைக் கேட்கும் பொழுது பக்தியுடன் இருந்து கேட்க வேண்டும். குருவின் உபதேசப்படி ஒழுக வேண்டும். குருவிற்குச் செய்யும் தொண்டே சிறந்த தொண்டாகும். குருவை வழிபட்டு அருள் பெற்றவர்கள் மாணிக்கவாசகர், திருமூலர், மங்கையர்க்கரசியார், அப்பூதியார் ஆகிய அடியார்கள் ஆவர். 

            குரு வழி உபதேசம் என்பது காலம் காலமாக வள்ளுவ குலத்தில் இருந்துவந்துள்ளது இன்றைக்கு சோதிடத்தில் மிகப்பெரும் பிரிவான காண்ட சோதிடம் (நாடிசோதிடம்) இதன் அடிப்படையிலேயே போதிக்கப்படுகிறது இக்கலையானது வள்ளுவ குலத்தார்க்கு மட்டுமே சித்தமாகின்ற ஒன்று. 

        தில்லை வாழ் அந்தணர்தம் ஆயிரம் என்று தான் வரலாறு கூறுகிறது தில்லைவாழ் தீட்சிதர் ஆயிரம் என்று எவ்விடத்திலும் காணப்படவில்லை, தில்லை நடராசப்பெருமானின் ஆலயத்தை வள்ளுவர்களும் நிர்வகித்துவந்துள்ளனர்.


        சிதம்பரம் மேலரத வீதியிலுள்ள சொத்துக்கள் வள்ளுவர்கள் நிர்வாத்தில்தான் இருந்துள்ளது அதில்வரும் வருமானத்தைவைத்து ஆலய திருப்பணிகளைக் கவனித்துவந்துள்ளனர் 


        தைமாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் தில்லை நடராசருக்கு ஒரு மண்டகப்படி வள்ளுவ குலத்தவர்களுடையது, சிதம்பரத்தில் அருகிலுள்ள தில்லைவடங்கன் என்ற கிராமத்தில் வாழும் வள்ளுவர்களிடம் அதற்கான செப்பேடு இருந்துள்ளது. என்பது வாய்வழித்தகவல் 


        அதுபோல திருமுட்டம் பூவராகவசாமி திருக்கோயில் வள்ளுவர்களின் ஆழ்வார் கோத்திரத்தினர் நிர்வகித்துவந்துள்ளனர் 1000 வருடத்திய அரசமரம் அங்கு உள்ளது.


        குழந்தை இல்லாத இல்லத்தரசிகள் குழந்தைவரம்கேட்டு வழிபடும் தலமாக இருக்கிறது இந்த ஆலயத்தில் “அரசடி விழா” என்னும் விழாவை வள்ளுவர்கள் நடத்திவந்துள்ளனர் அந்த விழா வள்ளுவர்களுக்கு உரித்தானது என்பதற்கான செப்பேடுகளும் இருந்துள்ளன.


ஆன்மீகமும் குருத்துவமும் வள்ளுவர்களின்று பிரிக்கமுடியாத ஒன்றாக காலம் காலமாக இருந்துவருகிறது இன்றைக்கு இந்தகுலத்தின் நிலைஎன்ன….??? 

         நமக்குறிய உரிமைகளையும், பெருமைகளையும் இழந்துவரும் நாம் இனியும் இன உணர்வற்றவர்களாக இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் வள்ளுவம் என்ற குலம் இருந்தது என்று வரலாற்று புத்தகங்களில் கூட இடம்பெறாமல் போய்விடுவோம். விழித்தெழுங்கள், வள்ளுவர்களாக ஒன்றிணையுங்கள் வள்ளுவ குலத்தை வாழவையுங்கள். 

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!
அறிவன். வெ.செ.அறியரசுதன்
உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை அறக்கட்டளை
9994724447, 9994799952, 8220025363, 9566551805